கிளாமர் காட்டினால் பாலிவுட்டில் சான்ஸ்! அதை உடைத்தெறிந்த சாய்பல்லவி.. என்ன மேட்டரு தெரியுமா?
மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. தமிழ்நாட்டு பெண்ணாக இருந்தாலும் மலையாளத்தில் தான் இவருக்கு உண்டான கிரேஸ் அதிகமாக இருக்கின்றது. மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் முதன் முதலில் நடித்த பிரேமம் திரைப்படம் மலையாள சினிமா மட்டுமல்ல தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதிலிருந்து தமிழ் ரசிகர்களும் சாய்பல்லவி மீது அளவு கடந்த அன்பை காட்ட ஆரம்பித்து விட்டனர். இதுவரை எந்த படங்களிலும் அவர் கிளாமர் காட்டி நடித்ததே கிடையாது. தன்னுடைய நடிப்பை மட்டுமே வைத்து தனக்கான அந்தஸ்தை தேடிக்கொண்டார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவருடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது.
தமிழ் மலையாளம் கன்னடம் போன்ற மொழிகளில் மட்டுமே நடித்து வந்த சாய் பல்லவி இப்போது ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஹிந்தியில் கிளாமர் காட்டினால் தான் பட வாய்ப்பு என்ற நிலைமை இருக்க தனக்கு வந்த நல்ல சான்சையே வேண்டாம் என்று உதறித் தள்ளியவர் சாய் பல்லவி. அதன் பிறகு இப்போது ஹிந்தியில் ராமாயணம் திரைப்படம் உருவாகி வருகிறது.
அதில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இப்போது வந்த தகவலின் படி மீண்டும் ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது பிரபல ஹிந்தி நடிகரான அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நடிக்கும் ஒரு திரைப்படம். அதில் இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கப் போவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜூனைத் கான் பாலிவுட்டில் வெளியான மகாராஜ் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் இவர்தான் நடித்துள்ளார். இதனை அடுத்து நடிகை சாய் பல்லவிக்கு ஜோடியாக ஜூனைத் கான் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை அமீர்கான் தயாரிக்க உள்ளாராம்.
சுனில் பாண்டே இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது .தற்போது சாய்பல்லவி இராமாயணம் படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது .இதன் முதல் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது