Aaryan: சக்சஸ் மீட்டில் சிகரெட் பிடித்தபடி வந்த செல்வராகவன்! ‘ஆர்யன்’ விழாவில் சர்ச்சையை கிளப்பிய வீடியோ
நேற்று ஆர்யன் பட சக்ஸஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. விஷ்ணுவிஷால் நடிப்பில் பிரவீன் கே இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் ஆர்யன். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடம் ஒரு பாஸிட்டிவான ரெஸ்பான்ஸையே பெற்று வந்தது. கிரைம் திரில்லர் பின்னணியில் உருவான இந்தப் படம் விஷ்ணுவிஷாலுக்கு மற்றுமொரு ராட்சசன் திரைப்படம் மாதிரி அமையுமா என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் ராட்சசன் திரைப்படத்தை எதிர்பார்த்து யாரும் வரவேண்டாம். இது முற்றிலும் வேறு மாதிரியான ஜானரில் அமைந்த கிரைம் திரில்லர் படம் என முன்பே விஷ்ணு விஷால் அறிவித்திருந்தார். அவர் சொன்னதை போல ஆர்யன் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. ரசிகர்களுக்கும் ஒரு புதுமையான அனுபவத்தை கொடுத்தது. குறிப்பாக படத்தில் செல்வராகவன் கேரக்டர் அனைவர் மத்தியிலும் பெரியளவில் பேசப்பட்டது.
அவரை வைத்துதான் படம் என்றே சொல்லலாம். சீனுக்கு சீன் பல ட்விஸ்டுகளை வைத்து இயக்குனர் படம் முடியும் வரை திரில்லிங்காகவே கொண்டு போயிருந்தார். இந்த நிலையில் படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பத்திரிக்கையாளர்களுக்கு படக்குழு பிரியாணி விருந்து வைத்து நன்றியை தெரிவித்தனர். இந்த விழாவிற்கு செல்வராகவன் கையில் சிகரெட்டுடனேயே வந்திருந்தார்.
அவருடைய வீடியோதான் இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. கையில் சிகரெட் பிடித்தவாறு நடந்து வருவதும் ஒரமாக அவர் சிகரெட் பிடிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. இதை ஒரு சில பேர் செல்வராகவனின் ஸ்வாக் செம என வைரலாக்கி வருகின்றனர். ஆனால் செல்வராகவனுக்கு என ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி மரியாதையே இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது சமூகத்திற்கும் தேவையான சில கருத்துக்களை அவர் வீடியோவில் சொல்லி வருகிறார். அப்படி இருக்கும் செல்வராகவன் பொது இடங்களுக்கு குறிப்பாக இந்த மாதிரி விழாவிற்கு வரும் போது சிகரெட்டை தவிர்த்திருக்கலாம் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.