பார்க்கிங் பட இயக்குனர் மட்டுமில்ல.. சிம்பு49 படத்தில் களமிறங்கும் பிரபலம்.. அப்போ சூப்பர்தான்

By :  Rohini
Update:2025-02-19 17:06 IST

நடிகர் சிம்பு: சிம்புவின் நடிப்பில் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். ஆனால் இதுவும் சிம்புவுக்கு ஒரு வித பிளஸ்ஸாகத்தான் இருக்கும். ஏனெனில் அவருடைய படம் இப்போது வெளியாகும் பட்சத்தில் அதை ஒரு பெரிய திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள்.

முக்கியமான ரோல்: அவர் படம் வெளியாகிறதோ இல்லையோ விதவிதமான ஸ்டைலில் அவருடைய லுக் வெளியாகி பெரும் கூஸ் பம்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தினார் சிம்பு, இப்போது படு ஸ்டைலாக இருக்கிறார் சிம்பு. பத்து தல படத்திற்கு பிறகு எந்த படமும் வெளியாகாத நிலையில் ஜூன் 5 ஆம் தேதி தக் லைஃப் படம் வெளியாக இருக்கின்றது. கமல் மணிரத்தினம் கூட்டணியில் உருவான இந்தப் படத்தில் சிம்பு ஒரு முக்கியமான ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சிம்பு 49: கூடவே திரிஷாவும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இந்தப் படத்திற்கு பிறகு சிம்பு அடுத்தடுத்து இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே செய்து வைத்திருக்கிறார். அதில் பார்க்கிங் பட இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு அவருடைய 49வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் தான் அடுத்ததாக உருவாக இருக்கிறது.

பார்க்கிங் பட எடிட்டர்: இந்தப் படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டு இப்போது சாய் அபயங்கர் இசையமைக்க இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பார்க்கிங் படத்தின் எடிட்டர் ஃபிலோமின் ராஜ்தான் சிம்பு படத்திற்கு எடிட்டராம். ஏற்கனவே பார்க்கிங் படத்தில் வேறொரு எடிட்டரை வைத்துதான் வேலை பார்த்திருக்கிறார்கள். ஆனால் எடுத்த வரைக்கும் படத்தை போட்டு பார்த்த போது விஷுவலாக படம் சரியாக இல்லையாம்.


அதன் பிறகுதான் ஃபிலோமின் ராஜு உள்ளே வந்திருக்கிறார். இப்போது நாம் பார்க்கும் பார்க்கிங் பட எடிட்டிங் வெர்ஷன் ஃபிலோமின் ராஜ் எடிட் செய்ததுதான். அதுதான் அந்தப் படத்திற்கும் ஒரு பிளஸ்ஸாக அமைந்தது. அவர்தான் இப்போ சிம்பு படத்திற்கும் எடிட்டராம். இதற்கு அடுத்த படியாக சிம்பு 50 மற்றும் 51 ஆகிய படங்களில் ஒரே நேரத்தில் நடிக்க போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது,

Tags:    

Similar News