ஜோதிகா பெயர் கூட சிம்ரன் வாயில இருந்து வரலையே!.. ரெண்டு பேருக்கும் இடையே சண்டை உண்மை தான் போல!..

ஜோடி படத்தில் நடிக்க ஆரம்பித்த சிம்ரன், த்ரிஷா இருவரும் 25 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வருவதெல்லாம் எந்தவொரு நடிகைக்கும் கொடுத்து வைக்காத பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும். வந்த வேகத்துல வாம்மா மின்னல் என பல நடிகைகள் காணாமல் போய்விடும் நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் மீண்டும் டாப் ஹீரோயினாக கலக்கி வருகிறார் சிம்ரன்.
ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் தொடங்கி தொடர்ந்து இவரும் அஜித் உடன் குட் பேட் அக்லி, சமந்தாவின் வெப்சீரிஸ், சசி குமாருடன் டூரிஸ்ட் ஃபேமிலி என அசத்தி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் ஆன்ட்டி ரோலில் நடிக்கிறீங்க என சக நடிகை ஒருவர் கிண்டலாக பேசியது குறித்து வெளிப்படையாக பேசி மனதில் இருந்த பாரத்தை எல்லாம் சிம்ரன் இறக்கி வைக்க, அப்படி பேசியது யாராக இருக்கும் என சிம்ரன் உடன் நடித்த நடிகைகளின் பட்டியலை போட ஆரம்பித்த நெட்டிசன்கள், சிம்ரன் “டப்பா” வேடங்களில் நடிப்பதற்கு ஆன்ட்டியாக நடிப்பது எவ்வளவோ மேல் என பதிலடி கொடுத்தேன் என குறிப்பு கொடுத்த நிலையில், “டப்பா கார்ட்டெல்” வெப்சீரிஸில் நடித்த ஜோதிகாவை தான் சொல்கிறார் என கிளப்பி விட்டனர்.
அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றில் சிம்ரனிடம் ‘டப்பா கார்டெல்’வெப்சீரிஸில் நடித்த நடிகையைத் தான் நீங்க சொன்னீங்களா என்று கேட்க, அதை புரிந்துக் கொண்ட சிம்ரன் கடைசி வரை ஜோதிகா பெயரையே எடுக்காமல், டப்பா கார்டெல் ஒரு நல்ல வெப்சீரிஸ் என கேள்விப்பட்டேன். இன்னமும் அதை பார்க்க டைம் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட நடிகை எனக்கு சாரி கேட்டு மெசேஜ் பண்ணிவிட்டார் என்று பேச்சை முடித்துக் கொண்டார்.

ஜோதிகாவின் பெயரை கூட சிம்ரன் இவ்வளவு களேபரத்துக்குப் பிறகும் சொல்லவில்லை என்பதால், அவரைத்தான் குறிப்பிட்டுள்ளார் என மீண்டும் ரசிகர்கள் சண்டையை ஆரம்பித்துள்ளனர்.