{"vars":{"id": "76339:5011"}}

3 ஏக்கரில் பெரிய பங்களா!.. வீட்டிலேயே ஜிம்!.. சிவகார்த்திகேயன் கட்டிவரும் புதிய வீடு!...

சிவகார்த்திகேயன் கட்டிவரும் புதிய வீடு!...
 
சிவகார்த்திகேயன்

விஜய் டிவியில் ஆங்கராக வேலை செய்து திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அப்படியே ஹீரோவாக மாறியவர்தான் சிவகார்த்திகேயன். சினிமாவில் இவரின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது. சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கி சில வருடங்களிலேயே அவருக்கு முன்னால் சினிமாவுக்கு வந்த பல நடிகர்களையும் பின்னுக்கு தள்ளி மேலே போனார் சிவகார்த்திகேயன். அவர்கள் எல்லோரையும் விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறினார்.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து அவரோடு சினிமாக்கு வந்தவர்களும் அவருக்கு முன்னால் சினிமாவுக்கு வந்த நடிகர்களும் கூட பொறாமைப்பட்டார்கள், ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்கள் சிவகார்த்திகேயனை வசூலை குவிக்கும் ஒரு நடிகராக மாற்றியது.

காதல், கலந்த காமெடி படங்களில் மட்டுமே நடித்துவந்த சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் ஹீரோ, வேலைக்காரன், அமரன் போன்ற சீரியஸ் சினிமாக்களிலும் நடிக்க துவங்கினார். மேலும்,  முருகதாஸ் இயக்கத்தில் உருவான மதராஸி படம் மூலம் முழு ஆக்சன் ஹீரோவாகவும் மாறினார். ஒருபக்கம், சுதாகொங்கரா இயக்கத்தில் அவர் நடித்துள்ள பராசக்தி திரைப்படமும் ஒரு சீரியஸ் சினிமாவாகவே உருவாகியிருக்கிறது.

அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்திலும், டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜயின் தவெக அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் 3 ஏக்கரில் ஒரு பிரம்மாண்ட பங்களாவை சிவகார்த்திகேயன் கட்டி வருகிறாராம். அந்த வீட்டில் அவருக்கென தனி ஜிம்மும் உருவாகி வருகிறது. அனேகமாக அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டதும் அந்த வீட்டிற்கு சிவகார்த்திகேயன் குடும்பத்தோடு குடியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.