10 வருஷத்துக்கு அப்புறம் பாருங்க.. சூர்யாகிட்ட சேலன்ச் விட்ட சிவகார்த்திகேயன்..என்னாச்சு தெரியுமா?
சிவகார்த்திகேயன்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய வளர்ச்சி அனைவருக்குமான ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் ஆரம்பத்தில் இருந்து அவருடைய பயணத்தை பார்த்தவர்கள் இந்த சினிமாவில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் சில பேரிடம் ஆரம்பத்தில் பேட்டி எடுத்தவரே சிவகார்த்திகேயன் தான்.
மேலும் நடிகர்களுக்கான விருது வழங்கும் விழாவில் ஒரு ஓரமாக இருந்து அந்த விழாவை தொகுத்தவரும் சிவகார்த்திகேயன்தான். அப்போது அந்த நடிகர்களை பெருமளவு பாராட்டி மேடைக்கு வரவழைத்தும் இருக்கிறார். ஆனால் இப்போ நிலைமையே வேற. எந்த நடிகர்களை சிவகார்த்திகேயன் கௌரவப்படுத்தி மேடைக்கு அழைத்தாரோ அவர்களுக்கே இப்போது டஃப் கொடுக்கும் நடிகராக மாறியிருக்கிறார்.
அபார வளர்ச்சி:
இது சாதாரண வளர்ச்சியா? ஒவ்வொரு நடிகர்களிடமும் சிவகார்த்திகேயனுடன் ஏதாவது ஒரு வகையில் அனுபவம் நடந்திருக்கும். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் பரத் நடுவர்களாக இருந்தார்கள். அப்போதே ரம்யா கிருஷ்ணன் சிவகார்த்திகேயனின் எதிர்காலத்தை பற்றி கணித்திருந்தார்.
இப்படி சிவகார்த்திகேயனை பற்றி பல விஷயங்களை பகிரலாம். அந்த வகையில் விஜய் டிவியில் சூர்யா தொகுத்து வழங்கிய நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற நிகழ்ச்சிக்கு ஒரு முறை சிவகார்த்திகேயன் அழைக்கப்பட்டார். அந்த நேரம் சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் மெரினா போன்ற படங்களில்தான் நடித்திருந்தார்.
சூர்யாவிடம் சேலன்ச்:
அந்த நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் வந்ததும் சூர்யாவை பார்த்து ‘என்ன உடம்பு? ஒரு நாள் நானும் இப்படி வந்து நிற்கிறேன். பத்து வருஷம் கழிச்சு பாருங்க. இதே மாதிரி நானும் உடம்புடன் வந்து நிற்கிறேன்’ என கூற சூர்யா ‘ஒகே ஒகே வாங்க.’ என சந்தோஷத்துடன் கூறியிருப்பார்.
அவர் அன்று சொன்னதை போலவே அமரன் திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் எந்தளவு பயிற்சி எடுத்து அவரது உடம்பை மெருகேற்றியிருந்தார் என்பதை பார்க்க முடிந்தது.