மிட் நைட்ல வரும் போது! இதுவரை யார்கிட்டயும் சொன்னதில்ல.. மனசுல உள்ளத கொட்டிய SK

by Rohini |   ( Updated:2025-01-04 04:50:09  )
sivakarthikeyan
X

sivakarthikeyan

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி:

தற்போது தமிழ் சினிமாவில் விஜய் அஜித் இவர்களுக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்படும் நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதுவும் விஜயின் அரசியல் பயணம்தான் சிவகார்த்திகேயனை இப்போது லைம் லைட்டில் வைக்க காரணமாக அமைந்தது. ஏனெனில் விஜய் முழுவதுமாக அரசியலுக்கு சென்று விட்டால் விஜயின் இடத்தை யார் பிடிப்பார் என்ற ஒரு கேள்வி அனைவர் மத்தியிலும் எழ அந்த நேரத்தில் அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற விஜயின் இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிப்பார் என அனைவரின் கணிப்பாகவும் இருக்கிறது.

அது மட்டுமல்ல இன்னும் தொடர்ந்து இரண்டு மூன்று வெற்றிகளை சிவகார்த்திகேயன் கொடுத்து விட்டால் யாரும் அசைக்க முடியாத அந்த இடத்தை சிவகார்த்திகேயன் தொட்டு விடுவார் என்றும் பல பிரபலங்கள் கூறி வருகிறார்கள். அதற்கான முயற்சியிலும் தான் சிவகார்த்திகேயன் இப்போது இருந்து வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் இயக்குனர்களும் திறமை வாய்ந்த இயக்குனர்களாகவே இருக்கிறார்கள். தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

தேர்ந்தெடுக்கும் இயக்குனர்கள்:

இன்னொரு பக்கம் சுதா கொங்கரா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக துடிக்கும் இயக்குனர்களுடன் இணைந்து பணிபுரிய காத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் நேற்று விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் நேசிப்பாயா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

அந்த விழாவிற்கு சிவகார்த்திகன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் மேடையில் பேசிய சில விஷயங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக அவருடைய மாமனாரை பற்றி கூறியிருந்தார் .தன்னுடைய மாமனார் மனசு தங்கம் என்றும் ஆரம்பத்தில் வெறும் 4500 சம்பளமே வாங்கிக் கொண்டிருந்த என்னை இந்த அளவுக்கு என்கரேஜ் செய்து அவன் நிச்சயமாக ஜெயிப்பான் என்ற நம்பிக்கையில் எனக்கு பொண்ணும் கொடுத்து குடும்பத்தையும் நல்லபடியாக கவனித்தவர் தன்னுடைய மாமா என்று மிகவும் நெகிழ்ச்சி பட கூறி இருந்தார் சிவகார்த்திகேயன்.

உண்மையிலேயே கோட்:

அடுத்ததாக யுவன் சங்கர் ராஜாவை பற்றி பேசிய போது அவர் உண்மையிலேயே ஒரு கோட் என கூறினார் சிவகார்த்திகேயன். பெரிய நடிகர்கள் சின்ன நடிகர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல் அனைத்து நடிகர்களுக்கும் ஒரே மாதிரியான ஹிட் பாடல்களை கொடுத்தவர் யுவன் சங்கர் ராஜா என பெருமையாக பேசி இருந்தார் .அது மட்டுமல்ல சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ஹீரோ படத்தின் ஒரு விழாவிற்கு மிட் நைட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென யுவன் சங்கர் ராஜாவின் பாடலை கேட்டுக்கொண்டே போனாராம்.

sivakarthikeyan

அப்போது அந்தப் பாடலை கேட்டதும் உடனே யுவனுக்கு போன் செய்து நீங்கள் மற்றும் நா. முத்துக்குமார் காம்போவில் நான் ஒரு படம் பண்ணால் நன்றாக இருக்கும் என கூறினாராம் சிவகார்த்திகேயன். அதுவரை நான் யாருக்குமே அப்படி மிட்நைட்டில் போன் செய்து பேசியதே கிடையாது. அந்த அளவுக்கு அவருடைய பாடல் என்னை கவர்ந்தது என கூறினார் சிவகார்த்திகேயன்.

Next Story