‘மங்காத்தா’ படத்தில் இப்படி ஒன்னு நடந்ததா? வாலியின் ஐடியா.. அடிச்சு தூக்கிய கங்கை அமரன்

by Rohini |   ( Updated:2025-01-06 10:55:35  )
ajith
X

ajith

மங்காத்தா:

அஜித்திற்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக அமைந்தது மங்காத்தா திரைப்படம். அதுவும் அவருக்கு ஐம்பதாவது திரைப்படமாக அமைந்தது தான் ஒரு ஸ்பெஷல். அதுவரை அஜித்திற்கு ஒரு சில படங்கள் தோல்விகளையே தந்த நிலையில் மங்காத்தா திரைப்படம் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அஜித் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் வைத்தது. அதுவும் ஒரு மாஸ் ஹீரோ வில்லனாக நடிக்க தயங்கும் பட்சத்தில் பரவாயில்லை இந்த படத்தில் நான் துணிந்து வில்லனாக நடிக்கிறேன் என உச்சத்தில் இருக்கும்போதே நடித்தவர் அஜித்.

இந்த படத்தில் அவருடைய வில்லத்தனம் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஹீரோவாகவும் மக்கள் ரசிக்கத் தொடங்கினார்கள். வில்லனாகவும் ரசிக்க தொடங்கினார்கள். இனிமேல் இந்த மாதிரி மறுபடியும் வில்லனாக எப்போது அஜித் நடிப்பார் என்று கேட்கும் அளவிற்கு அந்த படம் சிறப்பாக அமைந்தது. இந்த நிலையில் மங்காத்தா படத்தில் ஒரு பாடலுக்கு வாலி வரிகள் எழுதி இருப்பார்.

9மணிக்கு வாலிக்கு வந்த போன்கால்:

வாடா பின்லேடா என்ற அந்த பாடலில் கடைசி பல்லவி அஜித் பாடுவது மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும். அதனால் அந்த பல்லவி வரிகள் மேல் வெர்ஷனாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப வாலியிடம் பல்லவி கேட்டு வாங்கு எனப் பாடகர் க்ரிஷிடம் வெங்கட் பிரபு சொன்னாராம். உடனே க்ரிஷ் நைட் 9 மணிக்கு வாலிக்கு தொலைபேசியில் அழைத்து இந்த மாதிரி கடைசி பல்லவி மேல் வெர்ஷனாக வேண்டும் என கேட்டிருக்கிறார்.

அதற்கு வாலி ‘டேய் நான் இப்போது மருத்துவமனையில் இருக்கிறேன். இப்பொழுது என்னால் முடியாது’ என கூறியிருக்கிறார். அதன் பிறகு ஒரு ஐடியா சொன்னாராம். இந்த வரிகளை அப்படியே அமரனிடம் கொடுத்து அவரிடம் பல்லவியை வாங்கு. எழுதி தருவார் எனக் கூறியிருக்கிறார். உடனே க்ரிஷ் அதை வெங்கட் பிரபுவிடம் சொல்ல வெங்கட் பிரபு அவருடைய அப்பாவான கங்கை அமரனிடம் இதை சொல்லி இருக்கிறார்.

கங்கை அமரனும் கடைசி பல்லவியை வாலி சொன்னதைப் போல இந்த பாடலுக்கு எழுதி கொடுத்தாராம். இதன் மூலம் ஒரே பாடலில் இரண்டு பாடலாசிரியர்கள் என்பது ஒரு புதுமையான ஒன்று என கிரிஷ் இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

Next Story