பொறந்தது இங்க.. விசுவாசம் மட்டும் அங்கேயா? கமல் மகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

by Rohini |
shuruthihasan
X

shuruthihasan

கமல்:

தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வரை அனைவருக்கும் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவை அடுத்தகட்ட லெவலுக்கு கொண்டு போக வேண்டும் என புது புது முயற்சிகளை எடுத்து அதை தன் படங்களின் மூலம் செய்து காட்டி வருகிறார் கமல்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி போன்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். நடிகராக மட்டுமில்லாமல் பன்முகத் திறமைகள் கொண்ட கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார். எத்தனையோ விருதுகள், பட்டங்கள் என உலகமே போற்றும் ஒரு நடிகராக இருந்து வருகிறார் கமல். இன்னொரு பக்கம் இவருடைய மூத்த மகளான சுருதிஹாசனும் சினிமாவில் நடித்து வருகிறார்.

பக்கா தமிழ் பெண்:

ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். பக்கா தமிழ் பெண்ணான இவர் தமிழ் மீது தனக்கு எப்பவுமே ஆர்வம் அதிகம் என்று கூறுவதுதான் வழக்கம். ஆனால் தமிழை விட தெலுங்கில்தான் இவருக்கு வாய்ப்புகள் அதிகமாக வருகிறது. குறிப்பாக தெலுங்கில் பல நல்ல நல்ல கதைகளத்தோடு வந்த படங்களில் இவரின் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சமீபத்திய ஒரு பேட்டியில் சுருதிஹாசனிடம் ‘ஏன் தமிழில் அதிகமாக படங்களில் நடிக்க வில்லை? தெலுங்கில்தான் கவனம் செலுத்துகிறீர்கள் ’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சுருதிஹாசன் தமிழில் வரும் கதைகள் எனக்கு பிடிக்கவில்லை. வந்த கேரக்டரில் எல்லாம் நடித்துவிடலாம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நடித்தால் நல்ல கேரக்டரில் நடிக்க வேண்டும்.

sruthi

ஆடியன்ஸை உற்சாகப்படுத்தவேண்டும். அப்படிப்பட்ட கதை வந்தால் நான் தான் நடிப்பதற்கு முதல் ஆளாக இருப்பேன். என்ன இருந்தாலும் நான் சென்னை பெண்தான் என சுருதிஹாசன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Next Story