பட்ஜெட்டே இவ்வளவுதானா? அப்போ இது மிகப்பெரிய வெற்றி.. ‘மதகஜராஜா’வின் மொத்த பட்ஜெட் தெரியுமா?

by Rohini |
madhakajaraja
X

வயிறுகுலுங்க சிரிக்க வைத்த படம்: நீண்ட வருடங்களுக்குப் பிறகு தியேட்டரில் வயிறு குலுங்க சிரித்து ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை கொடுத்திருக்கிறது மதகஜ ராஜா. விஷால் சந்தானம் கூட்டணியில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த படம் வெளியாகி ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கின்றது. படத்தில் வரலட்சுமி, அஞ்சலி ,மனோபாலா, மணிவண்ணன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கவலையை மறக்கனுமா?: மனோபாலாவின் காமெடியை பார்த்து இந்த மனுஷன் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு போய்விட்டாரே என்ற ஒரு வருத்தத்தையும் இந்த படம் நமக்கு கொடுத்திருக்கிறது. அந்த அளவுக்கு மனோபாலாவின் காமெடி படத்திற்கு கூடுதல் பலம். அதைப்போல சந்தானத்தின் காமெடியும் இத்தனை வருடங்கள் ஆகி அதிக அளவு வரவேற்பை பெற்றிருக்கிறது. அவரையும் ரசிகர்கள் என்னண்ணே! நீங்க ஏன் ஹீரோவாக நடிக்க போனீங்க? பேசாம காமெடி நடிகராகவே இருந்திருக்கலாமே என்ற ஒரு ஏக்கத்தையும் இந்த படம் கொடுத்திருக்கிறது.

வசூல் நிலவரம்: மொத்தத்தில் மதகஜராஜா அனைவரையும் கவலையை மறந்து சிரிக்க வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 12 வருடத்திற்கு பிறகு வெளியான படம் என்றாலும் இன்றும் ரசிக்கும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது. பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே இந்தப் படம் தான் அதிக அளவு மக்களை கவர்ந்த படமாகவும் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வசூல் குறித்த நிலவரங்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டு வருகின்றன.

பட்ஜெட்டே இவ்வளவுதானா?: படம் வெளியாகி மூன்று நாள்கள் ஆன நிலையில் இந்த மூன்று நாட்களில் படம் 18 கோடி வசூலித்திருப்பதாக தற்போது தகவல் தெரிவித்து இருக்கிறது. ஆனால் படத்தின் மொத்த பட்ஜெட் 15 கோடி என்று சொல்லப்படுகிறது. இதில் விஷாலுக்கு ஒரு கோடி சம்பளம், சுந்தர் சிக்கு மூன்று கோடி சம்பளம் என்ற வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் இனிவரும் நாட்களில் இந்த படம் இன்னும் பெரிய வசூலை அள்ளும் என சொல்லப்படுகிறது.

இந்த மூன்று நாட்களிலேயே மொத்த பட்ஜெட்டை தாண்டிய வசூலாக இந்த படம் அள்ளி இருக்கிறது. இன்னும் பொங்கல் விடுமுறை நான்கு நாட்கள் இருப்பதால் ஒரு மகத்தான வெற்றியை மதகஜராஜா திரைப்படம் பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சமீபகாலமாக வெற்றிக்கனியை ருசித்து வரும் சுந்தர் சி அடுத்ததாக கேங்ஸ்டர் என்ற மற்றுமொரு நகைச்சுவை படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story