ஒரே ஒரு சிங்கிள்தான்.. ஆட்டம் காண வைத்த அஜித்! தள்ளி போகிறதா ‘வணங்கான்’?
சவதீகா ஏற்படுத்திய அதிர்வலை:
நேற்று சோசியல் மீடியா முழுவதும் விடாமுயற்சி படத்தின் சவதீகா பாடல் வைபாகத்தான் இருந்தது. இன்றுவரை அந்த பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. youtubeபிலும் சவதீகா பாடல் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட துணிவு படத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து அஜித்தின் திரைப்படம் விடாமுயற்சி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த படத்தை பொருத்தவரைக்கும் ஒரே ஒரு பாடல் என தகவல் கிடைத்துள்ளது. நேற்று அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் என்ற அடிப்படையில் சவதீகா பாடல் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் டான்ஸ் மூடுக்கு கொண்டு போயிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். அனைவருமே அந்த பாடலில் அஜித் போட்ட ஹுக் ஸ்டெப்புகளை போட்டு ரீல்ஸ்களாக சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
வைபில் வைத்திருக்கும் அஜித்:
இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாத நிலையில் சமீப காலமாக விடாமுயற்சி படத்தை பற்றிய ஒவ்வொரு அப்டேட்டும் வந்த வண்ணம் இருக்கின்றன. இதில் அஜித் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை ஒரே வைபில் வைத்திருக்கிறார் அஜித். முதலில் படத்தின் டீசர் வெளியாகி டீசரை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்தனர்.
ஒரு ஹாலிவுட் தரத்தில் இந்த படத்தின் டீசர் அமைந்திருப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர். அதற்குப் பிறகு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியாகி இதுவரை பார்க்காத அஜித்தை இந்த பாடலில் பார்ப்பதாக கருத்து தெரிவித்து வந்தனர். அதுவும் அனிருத் இசையில் அஜித் என்றாலே அது ஒரு தனி கிக். அதை இந்த படத்திலும் சிறப்பாக செய்து இருக்கிறார் அனிருத் .
தள்ளிப்போகிறதா வணங்கான்?:
இந்த நிலையில் விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸ் ஆக ஜனவரி பத்தாம் தேதி என அறிவித்திருந்தது. ஏற்கனவே பொங்கல் ரிலீஸ் ஆக ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படமும் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் இன்று திடீரென வணங்கான் திரைப்படம் பொங்கல் தேதியில் இருந்து தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இன்னும் இதைப் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை .ஆனால் அரசல் புரசலாக பொங்கல் ரேஸில் இருந்து வணங்கான் விலகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என கூறி வருகிறார்கள். இதை அஜித் ரசிகர்கள் தங்களுக்கு ஏற்றவாறு ஒரே ஒரு சிங்கிள் தான். இதுக்கே இப்படியா என கிண்டலடித்து வருகின்றனர்.