Jailer 2: ஜெயிலர் 2-வில் விஜய் சேதுபதி!.. இந்த டிவிஸ்ட்ட எதிர்பார்க்கலயே!...
ஜெயிலர் 2
50 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 74 வயதிலும் இன்னமும் ஹீரோவாக நடித்து வருகிறார். 80,90களில் இவருடன் நடித்த பல நடிகர்கள் குணச்சித்திர நடிகராக மாறிவிட்டார்கள் அல்லது சினிமாவை விட்டு போய்விட்டார்கள். ஆனால் ரஜினி இன்னமும் ஹீரோவாக ஆக்டிவாக நடித்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
சில படங்கள் அவருக்கு சறுக்கினாலும் ஒரு ஹிட் படத்தைக் கொடுத்து தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ளும் திறமை ரஜினிக்கு உண்டு. அப்படித்தான் ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து ஜெயிலர் 2 படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
அனைத்து மொழிகளிலும் ஹிட் அடிப்பதற்காக தெலுங்கிலிருந்து சுனில், மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்திலிருந்து சிவ்ராஜ்குமார் ஆகியோரை நடிக்க வைத்தார்கள். அது நன்றாகவே ஒர்க்அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து இப்போது உருவாகி வரும் ஜெயிலர் 2-விலும் பாலையா மோகன்லால், சிவ்ராஜ்குமார் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான் திடீர் டிவிஸ்ட்டாக இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என்கிற செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. தற்போது கோவாவில் நடந்த வரும் படப்பிடிப்பில் ரஜினியோடு விஜய் சேதுபதியும் நடித்து வருகிறாராம். அது சேமியோ வேடமா அல்லது வேறு மாதிரியான கதாபத்திரமா என்பது இனிமேல்தான் தெரிய வரும். ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.