அரசியலுக்கு வந்துட்டா தூய்மையா இருக்கனுமா? விஜய் திரிஷா குறித்து அந்தணன் சொன்ன விளக்கம்
கோவாவில் விஜய்:
விஜயின் அரசியல் ஒரு பக்கம் சூடுபிடித்தாலும் சமீபத்தில் அவர் கோவாவிற்கு கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்காக சென்றது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் நடைபெற்றது. அவருடைய திருமணத்திற்கு திரையுலகில் இருந்து பெரியதாக யாரும் போகவில்லை. ஆனால் விஜயும் திரிஷாவும் சென்றிருந்தனர்.
அதுவும் ஒரே விமானத்தில் தனி விமானத்தில் விஜய் திரிஷா சென்றதுதான் இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஒரு கட்டத்தில் ஜஸ்டீஸ் ஃபார் சங்கீதா என்ற ஹேஸ்டேக்கை ஆரம்பித்து திரிஷாவுடன் ஏன் விஜய் தனி விமானத்தில் சென்றார் என்று அவருடைய கேரக்டரை கொச்சைப்படுத்தும் விதமாக பல சர்ச்சைகள் கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் அதற்கான விளக்கத்தை இப்போது கொடுத்திருக்கிறார். அவர் கூறியது இதோ:
இன்னொரு வாழ்க்கை இருக்கக் கூடாதா?:
விஜய் அரசியலுக்கு வந்து விட்டார். அரசியலில் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டுமாம். அப்போ த்ரிஷாவுடன் எப்படி கோவாவில் தனி விமானத்தில் சென்றார் என கேள்வி எழுப்புகிறார்கள். நான் கேட்கிறேன். தமிழக அரசியலில் நீங்கள் நம்புகிற விரும்புகிற தலைவர்களுக்கெல்லாம் இன்னொரு வாழ்க்கை இல்லையா? யார வேண்டுமென்றாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
எல்லாருக்கு பின்னாடியும் ஒரு வாழ்க்கை இருந்தது. அப்போ விஜய் மட்டும் என்ன தினந்தோறும் பாலில் குளித்து பன்னீரை குடித்துவிட்டு வருபவரா? அவரும் உங்களை மாதிரி சராசரி மனிதர் தானே .அவருக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. அவ்வளவுதான் .இதுல ஏன் அவரு போனார் என கேட்கிறீர்கள். உங்களுக்கு தெரியுமா தெரியாதா என தெரியல. எம்ஜிஆர் முதன்முதலாக முதலமைச்சர் ஆகும் போது அவருடைய பைல் அனைத்தையும் பார்த்தவர் அம்மையார் ஜெயலலிதா தான்.
கொள்கைப்பரப்பு செயலாளர்:
அன்று அவர் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். எல்லா பைலும் அவருடைய டேபிளுக்கு தான் போகும். டி நகரில் எம்ஜிஆர் வீடு அலுவலகமும் ஒன்று இருந்தது.. அங்கு ஜெயலலிதா கையெழுத்து போட்டா தான் அடுத்து அந்த பைல் அடுத்த கட்ட லெவலுக்கு போய் சேரும். இது அந்த நேரத்தில் பயங்கர விமர்சனத்திற்கும் ஆளானது. பின்னாளில் ஜெயலலிதாவே முதலமைச்சர் ஆக மாறினார்.
அப்போ தமிழக அரசியலைப் பொறுத்த வரைக்கும் மக்கள் இதை லெஃப்ட் ஹேண்டில் கையாண்டு கொண்டு தான் இருக்கிறார்கள். அவர் அப்படி இருக்கனும் இப்படி இருக்கனும் என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள். சரியாயிருக்கியா? அரசியலில் ஒழுங்கா இருக்கியா? அது போதும் என்ற அளவுக்கு தான் மக்கள் பார்க்கிறார்கள் என அந்தணன் கூறியிருக்கிறார்.