இவரு அட்லிக்கே அண்ணனா இருப்பாரு போல!.. லியோ பட போஸ்டர்களை எங்கே இருந்து சுட்டு இருக்காங்க பாருங்க!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், பல நூறு கோடிகளை பாக்ஸ் ஆபிஸில் அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் படத்தின் போஸ்டர்கள் கூட காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் லியோ படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர்கள் எங்கே இருந்து சுடப்பட்டது என்பதையும் தேடிக் கண்டுபிடித்து ஆதாரத்துடன் அடித்து நொறுக்கி வருகின்றனர். இத்தனை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்களுக்கு கூட போஸ்டர்களை டிசைன் செய்பவர்கள் ஹாலிவுட் படங்களில் […]

By :  Saranya M
Update: 2023-09-19 21:00 GMT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், பல நூறு கோடிகளை பாக்ஸ் ஆபிஸில் அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் படத்தின் போஸ்டர்கள் கூட காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் லியோ படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர்கள் எங்கே இருந்து சுடப்பட்டது என்பதையும் தேடிக் கண்டுபிடித்து ஆதாரத்துடன் அடித்து நொறுக்கி வருகின்றனர்.

இத்தனை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்களுக்கு கூட போஸ்டர்களை டிசைன் செய்பவர்கள் ஹாலிவுட் படங்களில் இருந்தும் வேற்றுமொழி திரைப்படங்களில் இருந்தும் போஸ்டர் டிசைன்களின் ஐடியாக்களை திருடி எப்படித்தான் புதிய போஸ்டர்கள் என வெளியிடுகிறார்கள் என்றே தெரியவில்லை.

இதையும் படிங்க: அய்யா அட்லீ அந்த படத்தை சீக்கிரம் பண்ணுய்யா!.. விஜய்யுடன் இணையும் சூப்பர் ஸ்டார்.. என்ன சொன்னார் தெரியுமா?..

வர வர இளம் இயக்குனர்கள் பலரும் மற்ற கதைகளையும் காட்சிகளையும் அப்படியே எடுத்து தங்கள் நடிகர்களை வைத்து மறு உருவாக்கம் செய்து புதிய படங்கள் எனக் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

ஏ ஆர் முருகதாஸை தொடர்ந்து இயக்குனர் அட்லி மீது ஏகப்பட்ட காபி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதைவிட பயங்கரமான ஆளா இருக்காரே என தற்போது ட்ரோல்கள் குவிகின்றன.

இதையும் படிங்க: கட்டுன புருஷன் அங்க கம்பி எண்ணுறான்.. உனக்கு போட்டோஷூட் கேக்குதோ!.. மகாலட்சுமியை விளாசும் ஃபேன்ஸ்!..

மேலும் லியோ படத்தின் கதையை ஒரு ஹாலிவுட் படத்தின் கதை தான் என தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. தி ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக லியோ இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

லியோ திரைப்படத்தையும் எல் சியூவுக்குள் லோகேஷ் கொண்டு வந்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏற்கனவே வெளியான அர்ஜுனின் ஹரோல்ட் தாஸ் காட்சி அப்படியே ரோலக்ஸ் சீன் என ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், தற்போது லியோ படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர்கள் கோல்ட் பர்சூட் எனும் ஹாலிவுட் படத்தில் இருந்தும் ஆயுதம் எனும் படத்தில் இருந்து சுடப்பட்டுள்ளதாக அந்த படங்களின் போஸ்டர்களுடன் கம்பேர் செய்து கழுவி ஊற்றி வருகின்றனர். பல நூறு கோடிகள் சம்பாதிக்கும் படங்களுக்கு கூட சொந்தமாக சிந்தித்து வேலை பார்க்க மாட்றாங்களே என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

Tags:    

Similar News