லியோ படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர்… என்ன ஜி இப்டியா பண்ணுவீங்க! கடுப்பான லோகேஷ்!

Leo Lalith: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து விட்டது. படத்தின் இறுதிக்கட்ட ப்ரோமோஷனையும் படக்குழு தொடங்கி விட்ட நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரின் கமெண்ட்டால் லோகேஷ் கடுப்பான  சம்பவம் ஓன்று நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. லியோ படம் ரிலீசுக்கு முன்னரே 450 கோடிக்கு அதிகமான வசூலை படைத்து இருக்கிறது. இப்படத்தில் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸ் இருக்குமா? விக்ரம் கமல் வருவாரா? ரோலக்ஸ் சூர்யாவின் எண்ட்ரி இருக்குமா என […]

By :  Akhilan
Update: 2023-09-12 04:01 GMT

Leo Lalith: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து விட்டது. படத்தின் இறுதிக்கட்ட ப்ரோமோஷனையும் படக்குழு தொடங்கி விட்ட நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரின் கமெண்ட்டால் லோகேஷ் கடுப்பான சம்பவம் ஓன்று நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

லியோ படம் ரிலீசுக்கு முன்னரே 450 கோடிக்கு அதிகமான வசூலை படைத்து இருக்கிறது. இப்படத்தில் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸ் இருக்குமா? விக்ரம் கமல் வருவாரா? ரோலக்ஸ் சூர்யாவின் எண்ட்ரி இருக்குமா என பல சந்தேகங்களும், கேள்விகளும் தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.

இதையும் படிங்க: அட தொட்டதுக்கெல்லாம் சினுங்குவாரு போல – கமல், ஸ்ரீதேவி போஸ்டரை பார்த்து விரக்தியில் ரஜினி எடுத்த முடிவு!

அர்ஜூன் க்ளிம்ஸ் வீடியோ இணையத்தில் ஒரு ஹைப்பை அதிகரித்தது. விஜயின் வீடியோ அதிக லைக்ஸ் குவித்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வேறு விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் த்ரிஷா கெட்டப் குறித்த ஒரு ஐடியா ரசிகர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் லியோ படத்தின முதல் பாதியினை பார்த்த தயாரிப்பாளர் லலித்குமார், லோகேஷிடம் எடிட்டர் ப்லோமின் ராஜ் செமையாக செய்து இருக்கிறார் எனப் பாராட்டினேன். ஆனால், லோகேஷ் சார் நான் தான் இயக்குனேன். நீங்க என்ன எடிட்டர பாராட்டுறீங்க எனச் செல்லமாக கோபித்துக் கொண்டார் எனக் கூறினார்.

இதையும் படிங்க: எனக்காக ஓடி வந்த அண்ணனுக்கு நான் செய்ய மாட்டேனா? பட்ட கடனை அடைக்க ஒரு நல்ல வாய்ப்பு – பயன்படுத்துவாரா விஜய்?

இந்நிலையில் செப்டம்பர் 30ந் தேதி லியோ ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க இருக்கிறது. எந்த பிரச்னையும் இல்லாமல் சரியாக நடத்தி முடிக்க வேண்டும் என விஜய் கறாராக கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Tags:    

Similar News