பையா பட சமயத்துல கார்த்தி - தமன்னா காதலிச்சாங்களா?.. லிங்குசாமி என்னப்பா இப்படி சொல்லிட்டாரு!..

by Saranya M |   ( Updated:2024-04-28 00:45:27  )
பையா பட சமயத்துல கார்த்தி - தமன்னா காதலிச்சாங்களா?.. லிங்குசாமி என்னப்பா இப்படி சொல்லிட்டாரு!..
X

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான பையா படத்தில் நடித்த கார்த்தி மற்றும் தமன்னா இருவரும் அப்போது காதலித்து வந்ததாக கிசுகிசுக்கள் கிளம்பின. இந்நிலையில் அது தொடர்பான கேள்விக்கு இயக்குனர் லிங்குசாமி வெளிப்படையாக பதில் அளித்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்திவீரன் படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தில் முரட்டு இளைஞனாக நடித்திருப்பார். ஆனால் அதன் பின்னர் வெளியான பையா படத்தில் சாக்லேட் பாயாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

இதையும் படிங்க: உங்க படத்துல ஐட்டம் சாங்!. அஜித்துக்கு நான் ஜோடி!. கோட் படத்திலிருந்து எஸ்கேப் ஆன நடிகை!…

மில்க் பியூட்டி ஆன தமன்னா பையா படத்தில் ”அடடா மழைடா” பாடலுக்கு கவர்ச்சி பொங்க நடனமாடி இருப்பார். கார் டிராவல் கதையாக உருவான அந்த படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது அவர்களின் கெமிஸ்ட்ரி அப்படி ஒர்க் அவுட் ஆகி இருக்கும். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் ஹெவியாக வெளியாகின.

இந்நிலையில் 14 வருடங்கள் கழித்து அது தொடர்பாக பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார் லிங்குசாமி. கார்த்தி அந்த அளவுக்கு ஸ்மார்ட் கிடையாது. அவர் அப்பா சிவக்குமார் என்ன சொல்கிறாரோ அதை மட்டும் தான் செய்வார். சூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு தெரியாமல் பல விஷயங்கள் நடக்கும். இருவரும் காதலித்ததாக வெளியான வதந்திகளை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது அவர்கள் இருவருக்கு மட்டும் தான் தெரியும் என கன்ஃபியூஸான பேச்சால் ரசிகர்களை குழப்பி விட்டார்.

இதையும் படிங்க: நீயெல்லாம் ஞானியா?.. இளையராஜாவுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்த வைரமுத்து!.. இப்படி சொல்லிட்டாரே!..

காவாலா பாடலில் தமன்னா நடனமாடி அதைவிட படு கிளாமராக பையா படத்தில் இடம்பெற்ற பாடல்களில் தான் தமன்னா கிளாமராக ஆடினாரா? என்கிற கேள்விக்கு அந்த படத்தில் நடிக்கும் போது தமன்னாவின் வயது 19 அப்போதே சொன்னேன் இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் இப்படியே இருப்பீர்கள் என்றேன். சமீபத்தில் பையா ரீ ரிலீஸ் காரணமாக அவரை சந்தித்த போது அதை நினைவுபடுத்தி சொன்னார்.

சினிமாவில் ரொம்பவே சின்சியரான பொண்ணு தமன்னா அதனால் தான் அவர் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் தாக்குப்பிடித்து தனக்கான உச்சத்தை தொட்டு உள்ளார் எனக் கூறியுள்ளார்.

இதையெல்லாம் படிங்க: காலேஜ் படிக்கும் போது காதலில் விழுந்தாரா விஜய்?!.. அதனால்தான் காதல் படங்களில் அப்படி நடிச்சாரா?!..

Next Story