முதல் படமாக ஓடிடியில் எண்ட்ரியாகும் லக்கி பாஸ்கர்.. தேதி இதுதானுங்கோ!
Lucky Bhaskar: தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் முதல் படமாக லக்கி பாஸ்கர் ஓடிடி வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. இப்படத்தின் வெளியிட்டு தேதி குறித்த விவரங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
பெரும்பாலும் பண்டிகை தினத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவிடும். இந்த முறை தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன், துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர், ஜெயம் ரவி நடிப்பில் பிரதர், கவின் நடிப்பில் ப்ளடி பெக்கர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது.
இதையும் படிங்க: குட் பேட் அக்லி டீமுக்கு நோ சொன்ன அனிருத்… உள்ளே வரும் முக்கிய பிரபலம்…
இதில் துல்கர் சல்மான் திரைப்படம் எதிர்பார்த்ததுபோல மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. மலையாள சினிமா மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் திரைப்படம் மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. இருந்தும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் மிகப்பெரிய சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்தது.
இரண்டு படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் லக்கி பாஸ்கர் திரைப்படத்தால் 100 கோடி வசூலை மட்டுமே எட்ட முடிந்தது. ஆனால் அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸை அந்த நிறுவனமே தள்ளி வைத்திருக்கிறது.
இதையும் படிங்க: ரஜினியின் வேகமான ஸ்டைல்… வியந்து போன சிவாஜி அவருக்காக செய்த விஷயம்!
இந்நிலையில் லக்கி பாஸ்கர் முதல் திரைப்படமாக ஓடிடிக்கு வர இருக்கிறது. அந்த வகையில் நவம்பர் 28ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட இருக்கிறது. மீண்டும் அமரனுடன் ரிலீஸ் செய்தால் இப்படத்தின் வரவேற்பு அடிபடும் என்ற அடிப்படையில் முன்கூட்டியே படத்தை வெளியிட இருக்கின்றனர்.
சுமார் ஹிட் அடித்த பிரதர் மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் ஓடிடிக்கு வர வாய்ப்பு இருக்கிறது. அதை தொடர்ந்து டிசம்பர் முதல் வாரத்தில் அமரன் ரிலீஸ் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.