இளையராஜாவிற்கு எதிராக கொம்பு சீவி விட்டவரே இவர்தானா? கங்கை அமரன் சினிமாவிற்கு வரக் காரணம்
தமிழ் சினிமாவில் தன் இசையால் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்தவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 70களின் காலகட்டத்தில் இருந்து இன்று வரை இசையில் தன் சாம்ராஜ்யத்தை கட்டியிருக்கிறார். அவரின் கால்ஷீட்டிற்காக அன்றிலிருந்து இன்று வரை பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ரஜினி, கமல் இவர்களின் படங்கள் முக்கால்வாசி வெற்றியடைவதற்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணமாக அமைந்தது. ரஜினி , கமல் மட்டுமில்லாமல் பெரும்பாலான முன்னனி நடிகர்களின் படங்களின் வெற்றிக்கும் காரணமாக அமைந்திருக்கின்றது.
எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு ரசிகர்களுக்கு தன் இசையால் விருந்து படைத்திருக்கிறார் இளையராஜா. இவர் ஒரு பக்கம் என்றால் அவரது சகோதரரான கங்கை அமரனும் அப்படித்தான். அவரும் ஒரு இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி சிறந்த கவிஞராகவும் திகழ்ந்து வந்திருக்கிறார். கரகாட்டக்காரன் படத்திற்கு இசையமைத்தவரே கங்கை அமரன் தான்.
இப்படி பல சூப்பர் ஹிட் படங்களுக்கு கங்கை அமரன் இசையமைத்திருக்கிறார். சில சமயங்களில் கங்கை அமரன் பாடிய பாடல்கள் மற்றும் இசையமைத்த பாடல்கள் என அனைத்துமே இளையராஜா பாடியவை தான் அனைவரும் கருதியிருக்கின்றனர். அந்த அளவுக்கு கங்கை அமரனின் குரலும் அவர் இசையமைக்கும் விதமும் இளையராஜாவை ஒத்தே இருக்கும்.
இந்த நிலையில் தான் கங்கை அமரனை பிரபல பாடகரான மலேசியா வாசுதேவன் ‘உனக்கும் திறமை இருக்கு, உன் அண்ணன் தான் இப்போது பிஸியாகி விட்டார். அவர் ஒரு பக்கம் போகட்டும். நீயும் உன் திறமையை காட்டு’ என கங்கை அமரன் சினிமாவிற்குள் நுழைய மலேசியா வாசுதேவன் ஒரு விதத்தில் காரணமாக இருந்தாராம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறினார்.