வாயை கொடுத்து எதையோ புண்ணாக்கிக் கொள்ளும் மணிகண்டன்!.. லவ்வர் படத்துல இப்படியொரு சீன் இருக்கா?
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான மணிகண்டனின் லவ்வர் படத்தின் ஸ்நீக் பீக் காட்சிகளை வெளியிட்டு மேலும், காதலர்களையும் இளைஞர்களையும் படத்துக்கு இழுக்கும் புரமோஷன் வேலைகளை லவ்வர் படக்குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானால் சலாம் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. அந்த படத்தை பார்த்து பின்வாங்காமல், தில்லாக தனது படத்தை மணிகண்டன் வெளியிட்டு விமர்சன ரீதியாக அந்தப் படத்தை விட இந்த படம் சிறப்பாக […]
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான மணிகண்டனின் லவ்வர் படத்தின் ஸ்நீக் பீக் காட்சிகளை வெளியிட்டு மேலும், காதலர்களையும் இளைஞர்களையும் படத்துக்கு இழுக்கும் புரமோஷன் வேலைகளை லவ்வர் படக்குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானால் சலாம் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. அந்த படத்தை பார்த்து பின்வாங்காமல், தில்லாக தனது படத்தை மணிகண்டன் வெளியிட்டு விமர்சன ரீதியாக அந்தப் படத்தை விட இந்த படம் சிறப்பாக உள்ளது எனும் விமர்சனத்தை பெற்று மாஸ் காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: சமத்தா சோபாவுல!.. சமந்தா என்ன பண்றாரு பாருங்க.. இப்போ எல்லாம் அந்த வேலையை இவரே பார்க்குறாரா?..
பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் மற்றும் ஸ்ரீகௌரி பிரியா காதலர்களாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் பாய் பெஸ்டி ஆக நடித்துள்ள கண்ணா ரவியின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
காதலர்களுக்கு இடையே நடக்கும் சண்டைகள், ரக்கடு பாயை விரும்பும் பெண்கள் காதலியை சந்தேகப்படும் காதலன், காதலர்களுக்கு தெரியாமல் பொய் சொல்லிவிட்டு தனது சந்தோஷத்தை அனுபவிக்கும் காதலி ஏதாவது பல விஷயங்களை உங்க லவ்வர் படத்தில் அடுக்கி உள்ளனர்.
இதையும் படிங்க: மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டேன்னு பில்டப் பண்ணாங்களே!.. கடைசியில் SK 23 ஹீரோயின் யாரு தெரியுமா?..
திவ்யாவின் அபார்ட்மெண்டுக்கு அருண் சென்று காதுகுத்து என பொய் சொல்லிவிட்டு பீச்சுக்கு போனதற்காக கத்தி சண்டை போடும் காட்சியும் உன்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு நான் போகணும் என்கிற அவசியம் எனக்கு இல்லை என சத்தம் போட்டு திட்டிவிட்டு திவ்யா நகர்ந்து செல்ல கார் கண்ணாடியை கையால் உடைத்து கை முழுக்க ரத்தம் வலிய அங்கேயே மணிகண்டன் மயங்கி விழும் காட்சிகள் தற்போது ஸ்நீக் பீக்காக வெளியாகியுள்ளன.