பேர் சொல்லி கூப்பிட்டதற்கு சந்திரமுகியாக மாறிய தேவயானி! வேட்டையன் ரூபத்தில் அடக்கிய மணிவண்ணன்
Actress Devayani: 90கள் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தேவயானி. முதன் முதலில் ஹிந்தியில் தான் இவருடைய அறிமுகம். அதன் பிறகு தமிழில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த தேவயானி சிவசக்தி என்ற சத்யராஜ் நடித்த ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி ஷாக் கொடுத்திருப்பார். அதன் பிறகு அவருடைய மார்க்கெட் என்ன? எப்படி இருந்தால் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக மாற முடியும் என்பதை உணர்ந்து அந்த படத்தில் நடித்ததற்காக மிகவும் வருந்தினார் தேவயானி.
அதன் பிறகு தான் அவருக்கு காதல் கோட்டை என்ற ஒரு அழகான ஒரு காதல் காவிய படம் தேடி வந்தது .அந்த ஒரு படம் தான் அவரை மிகவும் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதனை தொடர்ந்து அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் தேவயானி. ஆரம்பத்தில் தமிழே தெரியாத தேவயானி இப்போது தமிழ்நாட்டின் மருமகளாக மாறி இருக்கிறார்.
இதையும் படிங்க: சொத்தை விற்று கில்லி படத்தை ரிலீஸ் செய்த தயாரிப்பாளர்… அப்படி என்ன சோதனை?
அழகாக தமிழ் பேசிக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் களஞ்சியம். இவர் தேவயானி முரளி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த பூமணி என்ற திரைப்படத்தை இயக்கியவர். 1996 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் முரளி தேவயானி உடன் இணைந்து பிரகாஷ்ராஜ் ரேஷ்மா மணிவண்ணன் வினு சக்கரவர்த்தி போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் போது நடந்த ஒரு வித்தியாசமான சம்பவத்தை இயக்குனர் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். ஒரு சமயம் படத்தின் டெக்னீசியனான பூபதி என்பவர் தேவயானியை பெயர் சொல்லி அழைத்தாராம். உடனே கோபப்பட்ட தேவயானி இயக்குனர், கேமரா மேன் இவர்களைத் தவிர வேறு யாரும் என்னை பேர் சொல்லி அழைக்கக்கூடாது. ஒழுங்கா என்னிடம் வந்து மன்னிப்பு கேள் என மிகவும் அகங்காரமாக பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஒத்த வெற்றிக்காக ஏங்கும் முன்னணி நடிகர்… தனிஒருவனை கொடுத்த மோகன்ராஜா… தட்டிவிட்டு மொக்கை வாங்குறாரே!..
மன்னிப்பு கேட்கா விடில் நான் நடிக்கவே மாட்டேன் என்றும் அடம்பிடித்து இருக்கிறார் .முரளி எத்தனையோ முறை சொல்லியும் கேட்கவே இல்லையாம் தேவயானி. அதன் பிறகு ஒரு நாள் மணிவண்ணன் இதை கேள்விப்பட்டதும் ‘அந்த பொண்ணு தேவயானி எங்கே?’ என கேட்டிருக்கிறார். உள்ளே இருந்த தேவயானியை அழைத்த மணிவண்ணன் ‘பெயர் வைப்பது எதற்காக? பெயர் சொல்லி கூப்பிடுவதற்கு தானே? இல்ல பெயர் வைக்கும் போது இவர்கள்தான் கூப்பிடனும் இவர்கள் கூப்பிடக்கூடாது அப்படின்னு ஏதாவது கண்டிஷன் போட்டா பேரு வைக்கிறாங்க?
இதுல என்ன நியாயம் இருக்கு? என்னையும் மணிவண்ணன் சார் எங்கே? மணிவண்ணன் வாரான் போறான் என்று தான் கூறுகிறார்கள்ம் அதற்காக எல்லாரும் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்கணும்னு சொல்லிக் கொண்டா இருக்கிறேன்?’ என சரியான புத்திமதி கொடுத்தாராம் மணிவண்ணன். அதன் பிறகு சில நாட்கள் கழித்து இந்த படத்தின் ஆல்பம் வெளியாகி இருக்கிறது. அதை கிரியேட் செய்தது அந்த எலக்ட்ரீசியன் பூபதி தானாம். அதை பார்த்ததும் தேவயானி உன் திறமை என்னன்னு தெரியாம நான் அன்னைக்கு அப்படி பேசிட்டேன், என்னை மன்னித்துவிடு, இந்த அளவுக்கு எனக்கு புரிய வைத்தவர் மணிவண்ணன் எனக் கூறி செட்டில் இருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தினாராம் தேவயானி,