உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா?!. முட்டா கூ....ளா?!.. வெடித்த மன்சூர் அலிகான்!..
Mansoor alikhan: ஏற்கனவே சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மன்சூர் அலிகான். அவர் வசனம் பேசும் ஸ்டைலும், தலையை ஆட்டி ஆட்டி நடக்கும் உடல் மொழியும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிதாக இருந்தது. கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்தை எவ்வளவு ரசித்தார்களோ அதே அளவுக்கு மன்சூர் அலிகானையும் ரசித்தார்கள். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் வில்லனாக நடித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 350க்கும் […]
Mansoor alikhan: ஏற்கனவே சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மன்சூர் அலிகான். அவர் வசனம் பேசும் ஸ்டைலும், தலையை ஆட்டி ஆட்டி நடக்கும் உடல் மொழியும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிதாக இருந்தது.
கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்தை எவ்வளவு ரசித்தார்களோ அதே அளவுக்கு மன்சூர் அலிகானையும் ரசித்தார்கள். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் வில்லனாக நடித்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துவிட்டார். ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். இப்போது சரக்கு எனும் படத்தை சொந்தமாக தயாரித்து நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ரஜினி பேசலாம்.. மன்சூர் அலிகான் பேசக்கூடாதா?!.. திரிஷா விவகாரத்தில் வெடிக்கும் சர்ச்சை..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - திரிஷா நடித்த லியோ படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் செய்தியாளர்கள் முன்பு பேசிய மன்சூர் ‘லியோ படத்தில் திரிஷா என்றதும் சரி நமக்கு ரேப் காட்சியெல்லாம் இருக்கும் என ஜாலியாக இருந்தேன். அவரை அப்படியே அலேக்கா தூக்கி படுக்கையில் போடுவது போல கற்பனை செய்து பார்த்தேன்.. ஆனால், படத்தில் அப்படி காட்சி இல்லை’ என ஏமாற்றத்தோடு பேசியிருந்தார்.
இதையடுத்து திரிஷா அதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து பல நடிகைகளும் மன்சூர் அலிகானை கண்டிக்க, நடிகர் சங்கமும் மன்சூர் அலிகானை கண்டித்து அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் மிகவும் கோபப்பட்டு பேசினார்.
இதையும் படிங்க: த்ரிஷாவை மோசமாக கமெண்ட் அடித்த விவகாரம்.. மன்சூர் மீது பாயும் வழக்கு.. மகளிர் ஆணையம் காட்டிய அதிரடி..!
4 கோடிக்குக் மேல் செலவு செய்து ஒரு படத்தை எடுத்திருக்கிறேன். அதை வெளிவரவிடாமல் செய்வதற்காக இப்படி பண்ணுகிறார்கள். சினிமாவில் ரேப் காட்சி என்றால் நடிகையை உண்மையாக கற்பழித்துவிடுவார்களா?.. என்னிடம் விளக்கம் கேட்காமலேயே நடிகர் சங்கம் என்னை கண்டித்திருக்கிறது. உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா?.. முட்டா கூ....ளா?.. வேண்டுமென்றே என்னை டார்கெட் செய்கிறார்கள். எனக்கு பயமில்லை. தமிழ்நாடே என் பக்கம் இருக்கிறது.
என்னுடன் ஸ்கீரின் ஸ்பேஸ் செய்ய மாட்டேன் என திரிஷா சொல்கிறார். ஆனால், எல்லா பத்திரிக்கையிலும் ஏதோ பொண்ணு, மாப்பிள்ளை மாதிரி என் போட்டோவையும், அவர் போட்டையும் சேர்த்து செய்தி போடுகிறார்கள். மறுபடியும் சொல்கிறேன். நான் சொல்வதை புரிந்து கொள்ளாமல் இது நடக்கிறது. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என மன்சூர் அலிகான் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: த்ரிஷாவை வரவச்சு இத செய்வேன்! லோகேஷும் விஜயும் கோபிச்சுக்கிட்டாலும் பரவாயில்ல – மன்சூர் அலிகான் பகீர் பேட்டி