லியோ இல்லைங்க... மாஸ்டரே காப்பி தான் லோகியை வச்சி செஞ்ச பேரரசு...!
2004 முதல் 2012 வரை இயக்குனர் பேரரசு பல மாஸான படங்கள் கொடுத்துருக்காரு. விஜயைப் பற்றி என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்.
விஜய் ஏழை மாணவர்களுக்கு எல்லாம் இலவச நோட்டுகள் கொடுக்குறாரு. திருப்பாச்சி கமிட்டான டையத்துலயே நான் பார்த்து வியந்தது. ஒரு உதவி பண்ணும்போது அரசியலுக்காகப் பண்ணிட்டாருன்னு சொல்றது அந்த உதவியைக் கொச்சைப்படுத்துற மாதிரி.
அது திடீர்னு பண்ணல. இவரு காலம் காலமா பண்ணிக்கிட்டுத் தான் இருக்காரு. நான் திருப்பாச்சி வந்து 2004ல பண்ணுனேன். அதுக்கு 4 வருஷத்துக்கு முன்னாடியே இருந்து பண்றாரு. இது சும்மா விளம்பரத்துக்காகப் பண்றாருன்னு சொல்றது எல்லாம் பொய்.
இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டது வரைக்கும் சரி. நானும் டைரக்ஷன் பண்ணிருக்கேன். இது வேணும். இந்த சீனை வைங்கன்னு எதுவுமே சொன்னது இல்ல. அதுல அவருக்கு உடன்பாடு இல்லன்னா அவரு வந்து ரொம்ப விவாதம் பண்ண மாட்டாரு. இந்த அரசியல் டயலாக் எல்லாம் எங்களோட எண்ணம். அதை அவரு பிரதிபலிக்காரு.
நம்ம சொல்ற விஷயத்துல அவருக்கு உடன்பாடு இருந்தா தான் அதை பிரதிபலிப்பாரு. அப்ப இல்லைங்கற போது இது பிரச்சனையாயிடும்னா அதை வேணாண்னுடுவாரு.
என்னோட வளர்ச்சிங்கறது வேற. லோகேஷ் கனகராஜோட வளர்ச்சிங்கறது வேற. நான் வந்து முதல் படமே விஜய் சார் படம். பெரிய ஹீரோ. பெரிய கம்பெனி. பெரிய வாய்ப்பு. அதை வந்து வளர்ச்சின்னு சொல்ல முடியாது. லோகேஷ் கனகராஜோட வெற்றி தான் வளர்ச்சி.
பெரிய வாய்ப்பு கிடைச்சி வெற்றி அடைஞ்சது வேற. நம்ம வளர்ச்சிலருந்து பெரிய வாய்ப்பு கிடைக்கிறது வேற. அவரு ஸ்டெப் பை ஸ்டெப்பா போயி விஜய் சார்ட போயிட்டாரு. நான் வந்து முதல்லயே போயிட்டேன். ஏதோ லக்குன்னு சொல்வாங்கள்ல.
லோகேஷ் கனகராஜ் இப்ப உள்ள யூத் ஆடியன்ஸ்சுக்கு என்ன தேவை? அதை பல்ஸ்ல வச்சிருக்காரு. போதை ஒழிப்புங்கறது எப்பவோ வந்தது. அதை இப்ப உள்ள இளையதலைமுறைக்கு எப்படி கொண்டு போய் சேர்க்கணும்னு தெரிஞ்சி வச்சிருக்காரு.
இளையதலைமுறைன்னு சிவாஜி கணேசன் நடிச்ச படம். அதுல போதை இளைஞர்களைத் திருத்துவார். அது தான் இப்ப வந்த மாஸ்டரோட கதை. அப்ப உள்ள காலகட்டத்துக்கு எப்படி எடுக்கணுமோ அப்படி எடுத்துருக்காங்க. அப்ப ட்ரெண்ட்செட்ங்கறது ஸ்க்ரீன்பிளேல இருக்கு. இப்ப உள்ள ஆடியன்ஸ்சுக்கு ஏத்த மாதிரி சொல்லணும்னு தெரிஞ்சி எடுத்துருக்காரு.
இதை எல்லாம் பார்க்கும் போது... தேவர்மகன் படத்துல சிவாஜி சொல்ற டயலாக் ஞாபகத்துக்கு வருது. விதை நான் போட்டது...!