படம் வர்றதுக்கே நாக்கு தள்ளுது! ஆள விடுங்கடா சாமி - விக்ரம் சொன்ன ஐடியாவால் விழிபிதுங்கிய கௌதம்
Dhuruva Natchathiram: தமிழ் சினிமாவில் விக்ரம் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பொன்னியின் செல்வனை தவிர அவர் சோலோவாக நடித்த சமீபகால படங்கள் பெரும்பாலும் தோல்விகளையே சந்தித்து வருகின்றன.
அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோப்ரா திரைப்படம் மிக மோசமான தோல்வியை தழுவியது. இதனால் இயக்குனரும் சரி , விக்ரமும் சரி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள்.இந்த நிலையில் தான் பொன்னியின் செல்வன் படத்தில் கரிகாலனாக நடித்து மக்களின் அமோக வரவேற்பை பெற்றார்.
இதையும் படிங்க: அவருக்காக அட்ஜெஸ்ட் பண்ணனும்னு நினைச்சேன்!.. மேடையிலேயே ஓப்பனா சொன்ன இனியா!.
இந்தப் படத்திற்கு பிறகு அவர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தங்கலான். படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் படத்திற்கான எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இருக்கின்றது.
அதனால் இப்படியே போனால் மக்கள் நம்மை மறந்து விடுவார்கள் என தெரிந்து கொண்ட விக்ரம் துருவ நட்சத்திரம் படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என அதற்கான வேலையிலும் இறங்கியிருக்கிறார். ஏற்கனவே 4 வருடங்களாக கிடப்பிலேயே போடப்பட்ட இந்தப் படத்தை இப்பொழுதுதான் தூசி தட்டி எழுப்பியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஹிட் பட விழாவில் நம்பியார் அடித்த கமெண்ட்!.. பதில் கவுண்ட்டர் கொடுத்து அசரவைத்த எம்.ஜி.ஆர்…
ஆனால் துருவ நட்சத்திரம் படத்தின் மீது ஏகப்பட்ட கடன்கள் இருப்பதால்தான் இன்னும் படம் வெளிவராமலேயே இருக்கின்றன. இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படத்தை சமீபத்தில் விக்ரம் பார்த்தாராம்.
பார்த்துவிட்டு கௌதம் மேனனிடம் கண்டிப்பாக இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றாராம். அந்தளவுக்கு படம் நன்றாக வந்திருக்கிறதாம். 4 வருடங்களாகியும் படம் பார்ப்பதற்கு புதுமையாகவே இருக்கிறதாம்.
இதையும் படிங்க:ஹிட் பட விழாவில் நம்பியார் அடித்த கமெண்ட்!.. பதில் கவுண்ட்டர் கொடுத்து அசரவைத்த எம்.ஜி.ஆர்…
மேலும் படத்தில் டப்பிங்கிலும் கொஞ்சம் விக்ரமின் வாய்ஸ் சரிவராமல் இருந்ததாம். அதை எல்லாம் மறுபடியும் டப்பிங் பேசி முடித்துக் கொடுத்தாராம் விக்ரம். ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா, வெந்து தணிந்தது காடு, வேட்டையாடு விளையாடு போன்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் பற்றி ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் இப்பொழுது இந்தப் படத்திற்கான இரண்டாம் பாகத்தையும் விக்ரமே தானாக கேட்டுவிட்டாராம். ஆனால் இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் ஆள விடுங்கடா சாமி என்ற மன நிலையில் தான் இருப்பார் கௌதம்,