குதிரைகிட்ட என்ன பண்ற செல்லம்!... வேற லெவல் லுக்கில் மீரா ஜாஸ்மின்...
கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த அழகான நடிகைகளில் மீரா ஜாஸ்மினும் ஒருவர். லிங்குசாமி இயக்கிய ரன் படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குழந்தை போல முகபாவம் காட்டி ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.
விஜய், அஜித், விஷால் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இவர் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப்படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
சில மலையாள திரைப்படங்களிலும் நடித்தார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு காணாமல் போனார்.
இதையும் படிங்க: தளபதி 67-க்கு பின் லோகேஷ் இயக்கும் 3 திரைப்படங்கள்.. எல்லாமே செம மாஸ்!…
திருமணம் செய்து கொண்டு கேரளாவில் செட்டில் ஆனார். அதன்பின் அவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. மேலும், உடல் எடையும் கூடி மிகவும் குண்டான தோற்றத்துக்கு மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
தற்போது அடுத்த ரவுண்டுக்கு தயாராகியுள்ள மீரா ஜாஸ்மின் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பியுள்ள மீரா ஜாஸ்மின், கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் குதிரை அருகில் நிற்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.