லியோவிடம் மண்டியிட்ட ஜெயிலர்!.. அய்யய்யோ.. மீசையை எடுத்துட்டாரா மீசை ராஜேந்திரன்.. என்ன ஆச்சு?..
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் வசூலை முந்தி விட்டால் தன்னுடைய மீசையை எடுத்து விடுகிறேன் என மீசை ராஜேந்திரன் சவால் விட்ட நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை லியோ திரைப்படம் முந்தி விட்டதாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை வைத்து விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். லியோ படத்துக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த மீசை ராஜேந்திரன் லியோ ஒரு குப்பை படம் என்றும் […]
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் வசூலை முந்தி விட்டால் தன்னுடைய மீசையை எடுத்து விடுகிறேன் என மீசை ராஜேந்திரன் சவால் விட்ட நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை லியோ திரைப்படம் முந்தி விட்டதாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை வைத்து விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
லியோ படத்துக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த மீசை ராஜேந்திரன் லியோ ஒரு குப்பை படம் என்றும் அந்த படம் கண்டிப்பாக 300 கோடி வசூல் கூட வசூலிக்காமல் படு தோல்வியை சந்திக்கும் என்றெல்லாம் நடிகர் விஜயை மட்டமாக பேசி வந்த மீசை ராஜேந்திரன் ஒருவேளை லியோ திரைப்படம் ஜெயிலர் படத்தின் வசூலை முந்தி விட்டால் தனது மீசையை எடுத்து விடுவதாக உச்சகட்டமாக சவால் விட்டிருந்தார்.
இதையும் படிங்க: பாக்கக் கூடாதுனு தடுத்தாங்க! தல செஞ்ச வேலைய பார்த்து மிரண்டுட்டேன் – இப்படியெல்லாம் இருப்பாரா அஜித்?
நடிகர் ராஜேந்திரனுக்கு அடையாளமாக இருக்கும் மீசையையே அவர் பந்தயம் வைத்திருக்கிறாரே கண்டிப்பாக லியோ மிகப்பெரிய வசூல் பெரும் என்றும் அவர் மீசையை இழக்கப் போவது உறுதிதான் என்றும் பேட்டி கொடுக்க வரும்போதெல்லாம் தொகுப்பாளர்களே கையில் சேவிங் மெஷின் உடன் இருந்த காட்சிகளை பார்த்து முடிந்தது.
குடுத்த வாக்கை காப்பாற்றி விட்டேன் @actorvijay pic.twitter.com/Xvf9H5eBmF
— Meesai Rajendran (@MeesaiRajendra) October 31, 2023
இந்நிலையில், கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டேன் என மீசை இல்லாத முகத்துடன் மீசை ராஜேந்திரன் இருக்கும் போட்டோவை அவர் பெயர் கொண்ட ஐடியிலேயே போட்டுள்ளனர். ஆனால், இது போட்டோ எடிட் செய்யப்பட்ட ஒன்று என்றும் ஏமாற்றுவதை விட வேறு எதுவும் மீசை ராஜேந்திரனுக்கு தெரியாது என்றும் உண்மையான ஆம்பளையா இருந்தா மீசை எடுக்க சொல்லுங்க என விஜய் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
இதையும் படிங்க: அந்த டெலிட் பண்ண சீனை ரிலீஸ் செய்த லியோ டீம்!.. வெற்றி விழாவுக்கு ஃபுல் மோடில் தயார் போல!..