கடைசி காலத்தில் நேரில் வரவழைத்து அள்ளிக்கொடுத்த எம்.ஜி.ஆர்!.. நெகிழ்ந்து போன கமல்ஹாசன்!..
எம்.ஜி.ஆரை நடிகர் என சொல்வதை விட வள்ளல் என்றுதான் பலரும் சொல்வார்கள். ஏனெனில், தான் சம்பாதித்த பணத்தில் பெரும்பங்கு மற்றவர்களுக்காகவே கொடுத்தவர் அவர். சினிமாவில் சம்பாதித்த பணத்தையெல்லாம் தன்னிடம் உதவியென வந்தவர்களுக்கு வாரி கொடுத்தார். அதற்கு காரணம் அவர் வறுமையின் உச்சத்தை பார்த்தவர். யாரேனும் தனக்கு உதவமாட்டார்களா என ஏங்கியவர்.
நாடகங்களில் நடித்தால் தன் பிள்ளைகளுக்கு மூன்று வேளை சாப்பாடும், உடையும் கிடைக்கும் என்பதால் எம்.ஜி.ஆரையும், சக்கரபாணியையும் சிறுவயதிலேயே நாடகத்திற்கு அனுப்பி வைத்தார் சத்யா. அப்படி கஷ்டப்பட்டுத்தான் எம்.ஜி.ஆர் மேலே வந்தார் எம்.ஜி.ஆர். தன்னை தேடி வருபவர்களுக்கும் மட்டுமில்லாமல் அவர் செல்லும் வழியில் யாரேனும் கஷ்டப்படுவதை பார்த்தாலும் உடனே வண்டியை நிறுத்தி அவர்களுக்கு உதவி விட்டுதான அங்கிருந்து செல்வார். அதுதான் எம்.ஜி.ஆரின் குணம்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் நடித்து ரூ.350 கோடி வசூல் செய்த படம்!.. அப்பவே அசால்ட் பண்ணிய பொன்மன செம்மல்!..
எம்.ஜி.ஆர் திரையுலகினருக்கும், பொதுமக்களுக்கும் எந்த வழிகளிலெல்லாம் உதவினார் என்பது பல சம்பவங்கள் வரலாற்றில் இருக்கிறது. தான் சிறுவயதில் கஷ்டப்பட்ட போது மற்றவர்களின் உதவியால் வளர்ந்ததால் நிறைய சம்பாதிக்கும்போது எல்லோருக்கும் உதவ வேண்டும், கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு வாலிப வயதிலேயே ஏற்பட்டது.
இது ஒருபுறம் எனில், அவருக்கு மிகவும் பிடித்தவர்கள், அவரின் அன்பாக இருப்பவர்கள். அவரின் நம்பிக்கைக்கு உரியவர்கள் என எல்லோருக்கும் பணமாகவோ, நகையாகவோ அல்லது வேறு வழியிலோ எதையாவது கொடுத்துக்கொண்டே இருப்பார். அவருடன் நடித்த சில நடிகைகளுக்கு நகைகளையும் பரிசாக எம்.ஜி.ஆர் கொடுத்திருக்கிறார். இதை அவர்களே பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய பின் கமல்ஹாசனை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டாராம். இந்த தகவல் கமல்ஹாசனுக்கு தெரியவர அப்போது சிறுமியாக இருந்த ஸ்ருதிஹாசனை அழைத்துகொண்டு ராமாபுரம் தோட்டத்திற்கு சென்றுள்ளார். ஸ்ருதியை தூக்கிய கொஞ்சிய எம்.ஜி.ஆர் உள்ளே சென்று ஜானகியின் நகைகளை அள்ளிக்கொண்டு வந்து கமலிடம் கொடுத்து ‘இதையெல்லாம் உன் மகளுக்கு போட்டுவிடு’ என சொன்னாரம். இதைப்பார்த்து கமல் நெகிழ்ந்து போனாராம்.
கமல் சிறு வயதாக இருக்கும்போதே அவரை துக்கி கொஞ்சியவர் எம்.ஜி.ஆர். ஆனந்த ஜோதி என்கிற படத்தில் சிறுவனாக எம்.ஜி.ஆருடன் கமல் நடித்தார். கமலின் வளர்ச்சியை படிப்படியாக பார்த்தவர் எம்.ஜி.ஆர். அதனால், கமல்ஹாசன் மீது எப்போதும் அன்பு கொண்டிருந்தார். கமலுக்கு நிறைய அறிவுரைகளையும் சொல்லியிருக்கிறார். சககலா வல்லவன் படத்தை பார்த்துவிட்டு ‘இதைத்தானே நான் செய்து கொண்டிருக்கிறேன். நீ புதிதாக எதாவது பண்ணு’ என கமலை வேறுபக்கம் திருப்பிவிட்டவர் எம்.ஜி.ஆர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் நடித்து ரூ.350 கோடி வசூல் செய்த படம்!.. அப்பவே அசால்ட் பண்ணிய பொன்மன செம்மல்!..