சிம்பு போனால் என்ன நான் வரேன் - அண்ணாத்தயுடன் போட்டியிடும் சசிகுமார்
காமெடிப் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குனர் பொன்ராம். நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். அதன்பின் இவர் இயக்கிய சீமராஜா படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது.
இதையடுத்து மூன்று ஆண்டு இடைவேளைக்குப் பின் இவர் இயக்கியுள்ள படம் எம்.ஜி.ஆர் மகன். சசிகுமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக மிர்னாலினி ரவி நாயகியாக நடிக்கிறார். முந்தைய படங்களைப்போலவே அப்பா - மகன் சென்டிமென்டில் காமெடி கலந்து எடுத்துள்ளார் இயக்குனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளி சென்றது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. இதை டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிட உள்ளார்களாம்.
ஏற்கனவே தீபாவளியன்று ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் ஜெய் பீம், விஷாலின் எனிமி, அருண் விஜய்யின் வா டீல், சிம்புவின் மாநாடு ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளது. இதில் மாநாடு ரிலீஸ் தேதி மட்டும் சமீபத்தில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
ஜெய் பீம் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தீபாவளியை முன்னிட்டு ரஜினியின் படம் வெளியாவதால் தியேட்டர் குறைவான எண்ணிக்கையில் கிடைக்கும் என்பதால் மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தீபாவளி ரேஸில் சசிகுமாரும் இணைந்துள்ளதால் இந்த தீபாவளி கண்டிப்பாக ரசிகர்களுக்கு எண்டர்டைன்மெண்ட்டாக இருக்கும்.