தமிழ் சினிமாவில் ‘ஏ’ சர்டிபிகேட் வாங்கிய முதல் திரைப்படம்!.. அட நம்ம எம்ஜிஆர் நடித்ததா?!...

இந்தியாவில் தயாராகும் திரைப்படங்கள், ஆவணங்கள் என எந்த படங்களாக இருந்தாலும் மத்திய திரைப்பட வாரிய உறுப்பினர்களால் பார்க்கப்பட்டு அவர்கள் அனுமதித்து சர்டிஃபிகேட் வழங்கிய பிறகே திரையரங்குகளில் வெளியாகும். அதில் நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. ஒரு படம் இந்த வயதுடையவர்கள் மட்டுமே பார்க்கவேண்டும். குழந்தைகள் பார்க்க உகந்த படம் இல்லை என்று சென்சார் ஒரு வரையரையை வைத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் படத்தில் சில காட்சிகளை நீக்க சொல்வதற்கும் சென்சாருக்கும் உரிமை இருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதன் முதலில் […]

By :  Rohini
Update: 2024-07-19 00:57 GMT

mgr

இந்தியாவில் தயாராகும் திரைப்படங்கள், ஆவணங்கள் என எந்த படங்களாக இருந்தாலும் மத்திய திரைப்பட வாரிய உறுப்பினர்களால் பார்க்கப்பட்டு அவர்கள் அனுமதித்து சர்டிஃபிகேட் வழங்கிய பிறகே திரையரங்குகளில் வெளியாகும். அதில் நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. ஒரு படம் இந்த வயதுடையவர்கள் மட்டுமே பார்க்கவேண்டும். குழந்தைகள் பார்க்க உகந்த படம் இல்லை என்று சென்சார் ஒரு வரையரையை வைத்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் படத்தில் சில காட்சிகளை நீக்க சொல்வதற்கும் சென்சாருக்கும் உரிமை இருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஏ சர்டிஃபிகேட் பெற்ற முதல் திரைப்படம் பற்றிய ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதுவும் அது எம்ஜிஆர் படம் என்பது கூடுதல் ஆச்சரியத்தை அளிக்கிறது.

ஏ சர்டிஃபிகேட் என்பது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் படமாக அது இருக்கும் என்பது பொருள். அந்த வகையில் 1951 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான மர்மயோகி திரைப்படம்தான் ஏ சர்டிஃபிகேட் வாங்கிய முதல் தமிழ் திரைப்படம் என்று சொல்லப்படுகிறது.

ஏன் எம்ஜிஆரின் மர்மயோகி படத்திற்கு ஏ சர்டிஃபிகேட் கொடுத்தார்கள் என்பதற்கான காரணத்தை பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார். அதாவது அந்தப் படத்தில் ராஜா ஒருவர் பேயாக வருவதை போல் சித்தரித்திருப்பார்களாம். அதற்காகவே சென்சார் அந்தப் படத்திற்கு ஏ சர்டிஃபிகேட் கொடுத்ததாக சித்ரா லட்சுமணன் கூறினார்.

கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.இந்தப்படத்தின் வெற்றி, எம்.ஜி.ஆரை ஒரு திரை நட்சத்திரமாக பறைசாற்றியது. மேலும் இதில், "நான் குறி வைத்தால் தவற மாட்டேன், தவறுமே ஆனால் குறி வைக்க மாட்டேன்" என்ற எம். ஜி. ஆரின் வசனம் மிகவும் பிரபலமானது.

Tags:    

Similar News