துப்பாக்கியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்… அமரன் படத்தின் Honest review!..
துப்பாக்கியை வாங்கிய பின்னர் சிவகார்த்திகேயனின் முதல் திரைப்படமாக அமரன் வெளியாகி இருக்கிறது
Amaran: மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து அவரின் மனைவி ரபேக்கா வாயிலாக சொல்லப்படும் கதையாக அமரன் திரைப்படம் அமைந்து இருக்கிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் முதிர்ச்சி காட்டி இருக்கிறார். சிவகார்த்திகேயன் இதுவரை பார்த்த எந்த கோணமும் இல்லாமல் நடிப்பில் அதீத கவனம் எடுத்து இருக்கிறார். முதல் பகுதியில் கல்லூரி மாணவராக இருந்த போது அசால்ட்டாக நடிப்பால் அசத்தி இருக்கிறார்.
இரண்டாம் பகுதியில் பொறுப்பான ராணுவ வீரராகவும் தொடர்ச்சியாக மேஜர் முகுந்தாக நடிப்பில் தூள் கிளப்பி இருக்கிறார். எங்குமே நடிப்பு எனக் காட்டாமல் உண்மை வாழ்க்கையை பார்ப்பது போலவே இருந்துள்ளது. அதுபோலவே சாய்பல்லவியும் இந்து ரபேக்கா வர்க்கீஸாக காதலியாகவும், மனைவியாகவும் கியூட்டாக இருக்கிறார்.
முகுந்தை இழந்துவிட்டு இருக்கும் போது மொத்த சோகத்தையும் முகத்தில் அப்பட்டமாக காட்டி தியேட்டரையே அழுக வைக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையில் படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமான பின்னணி இசையில் பல இடங்களில் மிரள வைத்தும், கலங்க வைத்தும் இருக்கிறார்.
முதல் பகுதி முழுக்க முழுக்க காதலாலும், முகுந்தின் வாழ்க்கையில் இருந்த பயங்கரத்தை சொல்லும்படியாக இருந்தது. இரண்டாம் பகுதி ஆக்ஷன் காட்சிகளால் திணறடித்தது. விக்ரம் பட வெற்றியால் அமரன் தயாரிக்க முடிந்ததாக கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார்.
அதுபோல, அமரன் கண்டிப்பாக மாஸ்ஹிட் அடிக்கும். சின்ன சின்ன இடறல் இருந்தாலும் அதை கூட கண்டுக்கொள்ளாமல் படத்துடன் ரசிகர்களை ஒன்ற வைத்துள்ளது. அமரன் அட்ரா சக்க தான்!.