சூப்பர் மூவி.. செம பிளாஷ்பேக்!.. பிளாக்பஸ்டர்.. கேம் சேஞ்சர் பட முதல் விமர்சனம்!...

By :  Murugan
Update: 2024-12-23 07:17 GMT

கேம் changer

Game Changer: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள முதல் தெலுங்கு திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தை தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் உருவாக்கி இருக்கிறார்கள். இந்தியன் 2 பட வேலைகள் நிறுத்தப்பட்டபோது ஷங்கர் இயக்கிய திரைப்படம் இது. திடீரென ஒரு படத்தை இயக்க வேண்டிய சூழ்நிலை வந்ததால் அவரிடம் அப்போது கதை இல்லை.

அப்போதுதான் கார்த்திக் சுப்பாராஜ் தான் எழுதிய ஒரு கதையை ஷங்கரிடம் சொல்லி ‘இதை என்னால் பண்ண முடியாது. உங்களால்தான் இயக்க முடியும்’ என சொல்லி இந்த கதையை ஷங்கரிடம் கொடுத்திருக்கிறார். அப்படி உருவானதுதான் கேம் சேஞ்சர். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் நடிக்க தெலுங்கில் அதிக பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் தில் ராஜூ இப்படத்தை தயாரித்துள்ளார்.


கேம் சேஞ்சர் படத்தில் கியரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், நாசர், சமுத்திரக்கனி, அஞ்சலி என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

சொந்த வாழ்வில் பாதிக்கப்பட்ட ஒருவன் அரசியல்வாதிகளை திட்டம் போட்டு காலி செய்வதுதான் படத்தின் கதை என சொல்லப்படுகிறது. வழக்கம்போல் அதிக செலவு செய்து இப்படத்தை இயக்கியுள்ளார் ஷங்கர். இந்த படம் வருகிற ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ளது.


பாகுபலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பின் ராம் சரணின் பேன் இண்டியா படமாக கேம் சேஞ்சர் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படம் பற்றிய முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. புஷ்பா மற்றும் புஷ்பா 2 பட இயக்குனர் சுகுமார் இந்த படம் பற்றி பேசியிருக்கிறார்.

கேம் சேஞ்சர் படத்தை சிரஞ்சீவி சாருடன் பார்த்தேன். இந்த படத்திற்கு நான் முதல் விமர்சனத்தை கொடுக்க விரும்புகிறேன். முதல் பாதி அருமை.. இடைவேளை பிளாக்பஸ்டர்.. என்னை நம்புங்கள். இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. இந்த படத்தில் ராம் சரண் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். 'ரங்கஸ்தலம்' படத்திற்கு அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், கிடைக்கவில்லை. இப்போது கேம் சேஞ்சர் படத்திற்காக நிச்சயம் அவர் தேசிய விருது வாங்குவார்’ என சொல்லி இருக்கிறார். புஷ்பா 2 ஹிட்டுக்கு பின் சுகுமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News