தண்ணியில புருஷனுடன் ஜாலியாக ஜல்சா பண்ணும் நயன்தாரா!.. செம ரொமான்ஸு போ!..
Nayanthara: தமிழ் சினிமாவில் பல வருடங்களாகவே நம்பர் ஒன் நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. இவரின் ரசிகர்கள் இவரை லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கிறார்கள். ஹரி இயக்கிய ஐயா படத்தில்தான் நயன் அறிமுகமானார். அதன்பின் சில வருடங்கள் பல படங்களில் நடித்தாலும் நிலையான இடம் கிடைக்கவில்லை.
உடல் எடையை குறைத்து சிக்கென மாறி அவர் நடித்து வெளியான பில்லா, ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில படங்களில் நயனை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. இவருக்கு முன்பே சினிமாவில் அறிமுகமான திரிஷா பிடிக்க முடியாத இடத்தை நயன் பிடித்தார்.
இதையும் படிங்க: தலைப்பே வேற லெவல்!.. ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் கொடுத்த நயன்!.. வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!…
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக மாறினார். விஜயுடன் வில்லு, பிகில் ஆகிய படங்களிலும், அஜித்துடன் பில்லா ஏகன், விஸ்வாசம் ஆகிய படங்களிலும் ரஜினியுடன் சந்திரமுகி, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களிலும் நடித்தார்.
நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். நட்சத்திர ஜோடிகளிலேயே நயன் - விக்னேஷ் சிவன் ஜோடி எல்லோராலும் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்கு முன் வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளுக்கும் இவர்கள் அப்பா ஆனார்கள்.
இதையும் படிங்க: நயன்தாராவே ஒண்ணும் கொடுக்கல!.. கல்யாணம் ஆன பின்னரும் ஷாருக்கான் கிட்ட ஃபீலிங்கை கன்ட்ரோல் பண்ண முடியல போல!..
ஒருபக்கம் சினிமாவில் நடிப்பது, சினிமா தயாரிப்பது, அழகு சாதனை பொருட்களை வியாபாரம் செய் தொழில், ஒருபக்கம் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது என நயன்தாரா பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கிய நயன்தாரா அதில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கணவர் விக்னேஷ் சிவனும், நயனும் கேரளாவில் ஏரியில் ஜாலியாக பொழுதை கழிக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.