சென்னையில ஜவான் புரமோஷனுக்கு நோ!.. திருப்பதியில் ஷாருக்கானுடன் சாமி கும்பிட்ட நயன் (வீடியோ)...

by சிவா |   ( Updated:2023-09-05 06:19:26  )
nayan
X

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். இவரை பாலிவுட் பாட்ஷா என அழைக்கிறார்கள். உலகமெங்கும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹிந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்து எப்போதும் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர். தமிழ்நாட்டில் கூட இவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லியின் இயக்கத்தில் ஷாருக்கான் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தின் வேலை 3 வருடங்களுக்கு முன்பு துவங்கியது. கொரொனா காலத்தில் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு பின்னர் படப்பிடிப்பு நடந்து படம் முடிவடைந்துள்ளது. இப்படம் வருகிற 7ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: ‘ஜவான்’ போட்ட போடு.. இன்ஸ்டாவில் நுழைந்த ரகசியம்.. சும்மா ஆடுமா குடுமி?!…

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார். அதேபோல், ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், யோகிபாபுவும் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் ஷாருக்கானும் கலந்து கொண்டு பேசினார். அட்லி மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். இந்த படத்தை நான் இயக்க அண்ணன் விஜய்தான் காரணம். அவர்தான் என்னை என்கரேஜ் செய்து இப்படத்தை இயக்க வைத்தார் என அவர் பேசினார்.

இதையும் படிங்க: ஷங்கரையே பின்னுக்கு தள்ளிய அட்லீ! ‘ஜவான்’ படம் 300 கோடினு சொல்றதெல்லாம் பொய்யா?!..

வழக்கம்போல் நயன்தாரா இந்த பட விழாவில் கலந்துகொள்ளவில்லை. அவர் நடிக்கும் எந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார். ஷாருக்கானுக்காக கூட அவர் அதை மாற்றவில்லை. இந்நிலையில், திருப்பதியில் தனது கணவர் விக்னேஷ் சிவன், ஷாருக்கான் ஆகியோருடன் நயன்தாரா சாமி தரிசனம் செய்த வீடியோ சமூவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜவான் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியாது என சொன்ன நயன்தாரா ஷாருக்கானுடன் கோவிலுக்கு மட்டும் செல்வாரா? என நெட்டிசன்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.

Next Story