நிவேதா பெத்துராஜ் கார் டிக்கியில என்ன இருந்துச்சு தெரியுமா?.. போலீஸ் உடன் வாக்குவாதம் செய்தது ஏன்?

நடிகை நிவேதா பெத்துராஜ் காரை திடீரென வழிமறித்த போலீஸ் உடையில் இருந்தவர்கள் கார் டிக்கியை திறக்க சொல்லி நிவேதா பெத்துராஜிடம் கேட்க அதற்கு அவர் முடியாது என மறுத்து, இதை ஏன் ரெக்கார்ட் செய்கிறீர்கள் என கேமராவை தள்ளி விட்டு வாக்குவாதம் செய்யும் காட்சிகள் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எந்த ஊர்ல போலீஸ் கிராக்ஸ் செருப்பு போட்டுக்கிட்டு சுத்துது என ஆரம்பத்திலேயே இது ஒரு மட்டமான படப் புரோமோஷன் என்பதை கண்டுபிடித்து கழுவி […]

By :  Saranya M
Update: 2024-05-31 23:00 GMT

நடிகை நிவேதா பெத்துராஜ் காரை திடீரென வழிமறித்த போலீஸ் உடையில் இருந்தவர்கள் கார் டிக்கியை திறக்க சொல்லி நிவேதா பெத்துராஜிடம் கேட்க அதற்கு அவர் முடியாது என மறுத்து, இதை ஏன் ரெக்கார்ட் செய்கிறீர்கள் என கேமராவை தள்ளி விட்டு வாக்குவாதம் செய்யும் காட்சிகள் வெளியாகி வைரலானது.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எந்த ஊர்ல போலீஸ் கிராக்ஸ் செருப்பு போட்டுக்கிட்டு சுத்துது என ஆரம்பத்திலேயே இது ஒரு மட்டமான படப் புரோமோஷன் என்பதை கண்டுபிடித்து கழுவி ஊற்றிவிட்டனர்.

இதையும் படிங்க: வயித்துப் பொழப்புக்கு என்ன செய்ய? வாய்ப்பு இல்லாமல் சினிமா டு சீரியலுக்கு தாவிய நடிகர்கள்

இந்நிலையில் தற்போது அதனை ரிவீல் செய்யும் விதமாக வீடியோ ஒன்றை ஜீ5 தெலுங்கு ஓடிடி வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் கணித்தபடி இதுவொரு வெப் சீரிஸுக்கான புரோமோஷன் தான் என்பது தெளிவாகி உள்ளது. இதைக் கூட புரிந்து கொள்ளாமல் சில செய்தி சேனல்கள் நடிகை நிவேதா பெத்துராஜ் போலீசாரிடம் வாக்குவாதம் என அப்பட்டமாக செய்திகளை வெளியிட்டனர்.

தெலுங்கு வெப் சீரிஸான பருவா வெப்சீரிஸில் லீடு ரோலில் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இந்த மாதம் 14-ஆம் தேதி அந்த வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது. நடிகை நிவேதா பெத்துராஜின் கார் டிக்கியில் கொலை செய்யப்பட்ட டெட் பாடி இருப்பதாகவும், அதை ஹீரோவுடன் சேர்ந்து அவர் அப்புறப்படுத்துவது போன்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: ஒரு ஹைப்பும் இல்லாத இந்தியன் 2?.. ஆடியோ லாஞ்சுக்கு அப்புறமாவது தேறுமா?.. விழி பிதுங்கிய லைகா!..

இது போல மோசமான புரமோஷன் செய்யும் சினிமா பிரபலங்களுக்கு எந்தவொரு தண்டனையும் இல்லையா பாஸ் என டிடிஎஃப் வாசன் போல ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர். புரமோஷன் செய்யவே சரியா வரல இதுல வெப்சீரிஸை அந்த இயக்குனர் எப்படி எடுத்திருப்பார் என இதுலயே தெரியுது விளங்கிடும் என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

நிவேதா பெத்துராஜுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், ஓடிடி பக்கம் அவரும் ஒதுங்கிவிட்டார் என்று கிண்டல் செய்து வருகின்றனர். பருவு வெப்சீரிஸில் ஆணவக் கொலையை மையப்படுத்திய கதையை இயக்குனர் பவன் சடினேனி உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மாமியாரு முன்னாடியே அந்த மாதிரி சீன்ல நடிச்ச நிழல்கள் ரவி… ‘ஐயையோ… அவங்க என்ன நினைச்சிருப்பாங்க’..?!

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

https://x.com/chitrambhalareI/status/1796520175979676064

Tags:    

Similar News