எம்.ஆர்.ராதா நாடகத்தை படமாக்கும் போது நடிகவேளை ஓரங்கட்டிய என்.எஸ்.கே - விளைவு என்ன தெரியுமா?..

MR Radha:  நீயே என்றும் உனக்கு நிகரானவன் என்ற பாடலில் எம்.ஆர்.ராதாவை பற்றி சிவாஜி பாடியிருப்பார். அது வெறும் பாட்டு மட்டும் அல்ல. உண்மையான சத்தியமான வார்த்தையும் கூட. ஒரு பேட்டியில் கூட சிவாஜி  எம்.ஆர்.ராதாவை பற்றி ஒரு விஷயத்தை கூறியிருப்பார். அதாவது ஒரு ஃபிரேமில் என்னையும் ராதா அண்ணனையும் நிற்க வைத்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருப்பேன். ஏனெனில் ஒரு சின்ன விஷயத்தில் நம்மை தூக்கி சாப்பிட்டு விடுவார் என்று நடிகர் திலகமே ராதாவின் நடிப்பை பாராட்டி […]

By :  Rohini
Update: 2023-11-01 20:00 GMT

radha

MR Radha: நீயே என்றும் உனக்கு நிகரானவன் என்ற பாடலில் எம்.ஆர்.ராதாவை பற்றி சிவாஜி பாடியிருப்பார். அது வெறும் பாட்டு மட்டும் அல்ல. உண்மையான சத்தியமான வார்த்தையும் கூட. ஒரு பேட்டியில் கூட சிவாஜி எம்.ஆர்.ராதாவை பற்றி ஒரு விஷயத்தை கூறியிருப்பார்.

அதாவது ஒரு ஃபிரேமில் என்னையும் ராதா அண்ணனையும் நிற்க வைத்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருப்பேன். ஏனெனில் ஒரு சின்ன விஷயத்தில் நம்மை தூக்கி சாப்பிட்டு விடுவார் என்று நடிகர் திலகமே ராதாவின் நடிப்பை பாராட்டி மெய்சிலிர்க்க கூறியிருப்பார்.

இதையும் படிங்க: லியோ பட விழாவில் நடந்த மாபெரும் மோசடி!.. அடுத்த ரஹ்மான் நிகழ்ச்சியாக மாறிய சக்சஸ் மீட்…

ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்த எம். ஆர்.ராதா இயக்குனர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திரையுலகமே வேண்டாம் என ஒதுங்கி மீண்டும் நாடகங்களில் கவனம் செலுத்தினார். அவர் நடித்த நாடகங்களிலேயே ரத்தக்கண்ணீர் நாடகம்தான் மிகவும் பிரபலமான நாடகமாகும்.

அதே போல் இழந்த காதல் என்ற நாடகமும் ராதாவின் கெரியரில் மிக முக்கிய நாடகமாக அறியப்பட்டது. அந்த நாடகத்தில்தான் சிவாஜி வேசியாக நடித்திருப்பார். ஜெகதீஷ் என்ற கதாபாத்திரத்தில் எம்.ஆர்.ராதா நடித்திருப்பார். இந்த நாடகத்தை என்.எஸ்.கே படமாக்க வேண்டும் என விரும்பினார்.

இதையும் படிங்க: லியோவில் ஃபேக்கான கதையை சொன்ன லோகேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த பேரரசு! – யாருகிட்ட?

ஆனால் எம்.ஆர்.ராதா நடித்த கதாபாத்திரத்தில் படத்தில் அவரை நடிக்க வைக்க விருப்பமில்லாமல் இருந்தார் என்.எஸ்.கே. ஆனால் சிவாஜியின் கதாபாத்திரத்தில் படத்திலும் சிவாஜியே நடிப்பதாகத்தான் இருந்தது. ராதாவை பார்த்த கதாபாத்திரத்தில் வேறொருவரை மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என்பதை அறிய முதலில் என்.எஸ்.கே . சேலத்தில் ஜெகதீஷ் கதாபாத்திரத்தில் பாலையாவை நடிக்க வைத்து அந்த நாடகத்தை போட்டார்.

ஆனால் பார்க்க வந்த மக்கள் ராதாவின் கதாபாத்திரத்தில் பாலையாவை பார்த்ததும் இருந்த நாற்காலிகளை எல்லாம் போட்டு தூக்கி உடைத்துப் போட்டனர். இருந்தாலும் என்.எஸ்.கே மனம் மாறினாரா என்றால் இல்லை. படத்தில் வேறொருவரைத்தான் ராதாவின் பாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

இதையும் படிங்க: நானும் விஜயும் ஃபிரண்டா? என்ன மைக்கேல் ஜாக்சன்? தளபதி 68ல் நடிக்கிறீங்க! – இப்படி சொல்லிட்டீங்க?

Tags:    

Similar News