அமேசான் ப்ரைம் அறிவிப்பால் கடுப்பா இருக்கீங்களா?.. இந்த வாரம் வடிவேலு படம் வருதே!..

இயக்குநர் சுந்தர்.சி தயாரித்து, இயக்கி, நடித்தும் உருவான கேங்கர்ஸ் திரைப்படம் கடந்த மாதம் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலைவையான விமர்சனங்களை பெற்று சுமாராக ஓடியது. இந்நிலையில் தற்போது கேங்கர்ஸ் நாளை மே15ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான கேங்கர்ஸ் திரைப்படத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனீஷ்காந்த், பக்ஸ் பகவதி பெருமாள், மைம் கோபி, ஹரிஷ் பெரடி, அருள்தாஸ், சந்தானபாரதி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.
அரசன் கோட்டை என்ற கிராமத்தில் உள்ள ஒரு பள்ளி மாணவி மர்மமான முறையில் காணாமல் போகிறார். இதை ஆசிரியை சுஜாதா விசாரிக்க, காவல்துறை புறக்கணிக்கிறது. அதைத் தொடர்ந்து, உளவு போலீஸ் அதிகாரியாக சுந்தர். சி நியமிக்கப்படுகிறார். கதை நகைச்சுவை, ஆக்ஷன், மற்றும் சென்டிமென்ட் கலந்து முழு நீள பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.
பல ஆண்டுகள் கழித்து சுந்தர்.சி மற்றும் வடிவேலுவின் காம்பினேஷன் வொர்க்கவுட் ஆகும் என பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் சிலர் கதை பழசு, டபுள் மீனிங் அதிகம், லாஜிக் குறைவு, கவர்ச்சி காட்சிகள் நிறைந்துள்ளது என கடுமையாக விமர்சிக்கப்பட்டு மூன்று வாரத்தில் ரூ11 கோடி வரை மட்டுமே வசூலித்தது.
வடிவேலுவின் கம்பேக்காக இருக்கும் என பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் இப்படம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மேலும், தற்போது கேங்ஸ்டர் படம் அமேசான் ஒடிடி தளத்தில் நாளை மே 15ம் தேதி வெளியாக உள்ளது. சுந்தர்.சி இதையடுத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் பிஸியாக உள்ளார். தொடர்ந்து அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் சுமாரான படங்களே வெளியாகி வரும் நிலையில், சந்தாவை வேறு இஷ்டத்துக்கு ஏற்றப்போவதாக வெளியான அறிவிப்பு ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.