OTT: குட் பேட் அக்லி வந்தாச்சு.. இந்த வார ஓடிடியில் இத்தனை படங்களா?

By :  AKHILAN
Update: 2025-05-08 13:28 GMT

OTT: நெட்ஃபிளிக்ஸ், ஆஹா, அமேசான் பிரைம், ஜீ5, டெண்ட்கொட்டா, ஹாட்ஸ்டார் என முன்னணி ஓடிடி தளங்களில் பல்வேறு மொழிகளில் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும் வெளியாகயுள்ளன. இதுகுறித்த சுவாரஸ்ய தொகுப்புகள் இங்கே.

தெலுங்கில் வெளியாகியா ஜாக் திரைப்படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸாக இருக்கிறது. ஏரியாக எல்லாரும் பயந்து நடுங்குற மாஸ் ஹீரோ. அவன் எதிரிகள் பலர், ஆனா அவனோ ஒருத்தரா போறான். ஆக்ஷன் பாக்கணும்னா இதை மிஸ் பண்ணாதீங்க.

அஸ்திரம் ஒரு விஞ்ஞான கதையையும் ஆன்மீக எண்ணங்களையும் சேர்த்து சொல்லும் முயற்சி. நாயகன் கண்டுபிடிச்ச ஒரு சக்திவாய்ந்த கருவி, உலகத்தையே மாற்றக்கூடியது. அந்த கருவியை கையிலடைக்க பலரும் முயற்சிக்கிறார்கள். இவரோ அதை பாதுகாக்க போராடுகிறார். சுவாரஸ்யமான ஒரு புதிய வகை திரில்லர். ஆஹா ஓடிடியில் வெளியா இருக்கிறது.

ஒரு கிராமத்துல நடக்குற மர்ம கொலைகளைக் கொண்டு நகரும் ஓடேலா 2 திரில்லர் படம். பழம்பெரும் கதைகளும் பக்தி மயமான பின்னணியில அமைந்துள்ளது. போலீஸ் விசாரணையும் அதுல வரும் திருப்பங்களும் படத்தை பரபரப்பாக வைத்திருக்கும். பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

ஒரே 10 மணி நேரத்துல நடக்குற சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவான சஸ்பென்ஸ்-ஆக்ஷன் படம். டென் ஹவர்ஸ் படத்தினை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

அஜித்தின் சூப்பர்ஹிட் படமான குட் பேட் அக்லி. நல்லவனா, கெட்டவனா, மோசமானவனா என்ற குழப்பத்தோடு மூன்று பாத்திரங்களைச் சுற்றி நகரும் கதை. டார்க் ஹியூமர் கலந்த திருப்பங்களும், கதையின் முடிவும் கவனத்தை ஈர்க்கும். நெட்பிளிக்ஸில் தற்போது வெளியாகியுள்ளது.

பணக்காரர்களிடம் பணம் திருடி, ஏழைகளுக்கு கொடுக்குற ஹீரோவின் ஸ்டைலான மிஷன்கள். ஆக்ஷன், எமோஷன் இரண்டும் கலந்த படம். ஜீ5ல் இப்போது ஸ்ட்ரீமிங் ஆகுது.

தமிழ்-கேரள கலாசாரத்தை பின்னணியாக கொண்டு உருவான மென்மையான காதல் கதை. இசை, உறவுகள், நெஞ்சை வருடும் நினைவுகள். குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படமிது. டெண்ட்கொட்டாவில் தற்போது பார்க்கலாம்.

Tags:    

Similar News