OTT: ஆசைக்காட்டி மோசம் பண்ணிட்டீங்களே… இந்த வாரம் ஓடிடி ரிலீஸுக்கு வந்த திரைப்படங்கள்…

By :  AKHILAN
Published On 2025-07-03 12:30 IST   |   Updated On 2025-07-03 12:30:00 IST

OTT: பிரபல திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதன் அதிகாரப்பூர்வ லிஸ்ட் குறித்த தொகுப்புகள்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான இப்படம் பெரிய ஏமாற்றத்தை கிளப்பியது.

படம் ரிலீசாவதற்கு முன்னர் 8 வாரம் கழித்தே இந்த படம் ஓடிடிக்கு வர நிறுவனம் சம்மதித்து விட்டதாக கமல் பேசி இருப்பார். ஆனால் தற்போது அதிர்ச்சியாக 5 வாரத்தில் நெட்பிளிக்ஸில் Thuglife திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது.

காளிவெங்கட், ரோஷினி நடிப்பில் உருவான Madras Matinee திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது பிரைம் ஓடிடியில் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. 

 

இரு மதத்தில் இருக்கும் பிரச்னையை பேசும் Paramashivan Fathima திரைப்படம் நல்ல எதிர்பார்ப்பு இருந்தாலும் பெரிய ஹிட் கொடுக்கவில்லை. தற்போது இப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

நல்ல படங்களைக் கொடுத்து வந்த வெற்றி சமீபத்தில் பல படங்களில் சரியாக தேர்வு செய்யவில்லை. அந்த வரிசையில் அவர் நடிப்பில் Rajputhiran இந்த வாரம் சிம்ப்ளிசவுத்தில் ரிலீஸாக இருக்கிறது. ஆனால் ரசிகர்களை ஈர்க்குமா என்பது தெரியவில்லை.

பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் இந்த வாரம் ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளிவர இருக்கிறது The Good Wife வெப்சீரிஸ். கணவருக்கு ஏற்படும் பிரச்சனையை வக்கீலாக பிரியாமணி எப்படி எதிர்கொண்டார் என்பதை மையமாக வைத்து வெளிவரும் இந்த சீரிஸ் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இதுமட்டுமல்லாமல் பிரைம் ஓடிடியில் UppuKappuRambu பல மொழிகளில் வெளிவர இருக்கிறது. ஜீ5 ஓடிடியில் இந்தி திரைப்படமான Kaalidhar Laapata, சன் நெக்ஸ்ட் ஓடிடியில் Jagamerigina Satyam திரைப்படம் வெளியாக இருக்கிறது. சோனி லைவில் TheHunt இந்தி வெப்சீரிஸ், ஹாட்ஸ்டாரில் Companion ஆங்கில படம் வெளியாக இருக்கிறது.

பிரைம் ஓடிடியில் ஆங்கில படமான Heads Of State, நெட்பிளிக்ஸில் ஆங்கில படமான The Old Guard2, நெட்பிளிக்ஸில் ஆங்கிலத்தில் All The Sharks வெப்சீரிஸ் ரிலீஸாக இருக்கிறது. ரொம்ப வாரங்கள் கழித்து நிறைய தமிழ் படங்கள் ஓடிடிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News