ஓடிடி ரசிகர்களுக்கு மனசாட்சியே இல்லப்பா!... சாய் பல்லவி படத்துக்கே இந்த நிலையா?
Sai Pallavi: தற்பொழுது தமிழ் சினிமா ரசிகர்கள் புதிய ரூல்ஸ் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளனர். அந்த வகையில் தியேட்டர் மற்றும் ஓடிடி படங்கள் என தற்போது வகையாக பிரிக்கும் நிலையை உருவாக்கி இருக்கின்றனர்.
பொதுவாக சினிமா தியேட்டரில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்தால் சில வாரங்கள் கழித்து ஓடிடிக்கு வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கம். இதனால் அந்த படங்கள் தியேட்டரில் வசூல் குவித்துவிட்டால் ஓடிடி தொகையும் பெரிய அளவில் இருக்கும்.
அதனால் ஓடிடி நிறுவனங்கள் தயாரிப்பாளர் சொல்லும் தொகையை கொடுத்து வந்தனர். ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லை. தியேட்டரில் வெளியான படங்கள் ஓடிடிக்கு வந்து அந்த ரசிகர்களிடம் வேறு மாதிரியான விமர்சனங்களையும் குவித்து வருகிறது.
சூப்பர்ஹிட் அடித்த படம் கூட ஓடிடியில் அடி வாங்கியது. வாழை தொடங்கி இந்தியன் 2 வரை விமர்சனத்தினை குவித்தது. ஏற்கனவே தியேட்டரில் மோசமாக வசை வாங்கிய இந்தியன்2 ஓடிடியில் இன்னும் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றது
இப்படி தற்போது ஓடிடி ரசிகர்களின் ரசனையே மாறி இருப்பதால் இப்போது ஒரு படத்திற்கு என்ன விலை என்பதை ஓடிடி நிறுவனங்களே முடிவு செய்கிறது. சில நிறுவனங்கள் வார கணக்கில் கொடுக்கலாம் எனவும் கூறுவதாக சொல்லப்படுகிறது.
இதனால் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் வெளியான லால் சலாம் கூட இன்னமும் ஓடிடிக்கு வர முடியாமல் இருக்கிறது. மேலும், ரஜினிகாந்த் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தும் இந்த நிலை ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா நடிப்பில் தண்டேல் ரிலீஸ் ஆனது. தியேட்டரில் படம் மிகப்பெரிய அளவு வசூல் வேட்டை நடத்தி நல்ல வரவேற்பை பெற்றது. அப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
ஆனால் தியேட்டரில் ஹிட்டடித்த இப்படம் தற்போது மோசமான விமர்சனங்களை குவித்து வருகிறது. இது தமிழ் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.