OTT: ஒன்னே ஒன்னுதான்.. இந்த வார ஓடிடி அப்டேட் குறித்த அப்டேட்… நீங்க ரெடியா?
OTT: சினிமா ரசிகர்களுக்கு தற்போது சினிமாவை விட வார இறுதியில் வெளியாகும் ஓடிடி அப்டேட் பெரிய அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த வாரத்தின் பிரபல ஓடிடி சேனல்களில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் தொகுப்புகள்.
பிரைம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது 3BHK. இப்படத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சாதாரண கதையை வைத்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இத்திரைப்படம்.
சர்ச்சை நடிகை ஸ்ருதி நாராயணன் நடிப்பில் உருவான கட்ஸ் திரைப்படம் மற்றும் ஷாம் நடிப்பில் வெளியான அஸ்திரம் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியில் ரிலீஸாகி இருக்கிறது.
தெலுங்கை மையமாக கொண்டு உருவான சக்ரவியூகம் தமிழ் மொழியில் ஆஹா ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. நெட்பிளிக்ஸில் Thammudu மற்றும் ஜீ5 ஓடிடியில் Bakaiti வெளியாக இருக்கிறது. நெட்பிளிக்ஸில் ஆங்கில படமான மை ஆக்ஸ்போர்ட் இயர் வெளியாக இருக்கிறது.
யூட்யூப்பில் இந்தி படமான டியர்மென், அமீர்கான் நடிப்பில் வெளியான சித்தாரே ஜமீர்பார் வெளியிடப்பட்டுள்ளது. ஹாட்ஸ்டாரில் ஆங்கில படமான பிளாக்பெக் படமும் நைட்பிட்ச் படமும் ரிலீஸாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் SurabhilaSundaraSwapnam மலையாள படம் வெளியிடப்பட்டுள்ளது.