இதுக்கு மேலயும் அர்ச்சனாவுக்கு நாமத்த போட முடியாது!.. ஓடிடியில் வெளியான கோட்!.. வெங்கட் பிரபு பகீர்!

கோட் படத்தின் தியேட்டர் வெர்ஷன் தான் ஓடிடியில் இன்று வெளியாகி இருக்கிறது என இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார். எக்ஸ்டண்டட் வெர்ஷனுக்கு செலவாகும் எனக் கூறியுள்ளார்.

By :  saranya
Update: 2024-10-03 03:30 GMT

ஏஜிஎஸ் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி நடித்த கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியானது. அக்டோபர் 5-ஆம் தேதி வருவதற்கு முன்னதாகவே அக்டோபர் 3-ஆம் தேதி இன்று கோட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் கோட் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஓடிடியில் 3.30 மணி நேரம் கோட் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தியேட்டரில் வெளியான அதே படம் தான் ஓடிடியிலும் வெளியாகி இருக்கிறது.

இதுதொடர்பாக ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் வெங்கட் பிரபு கோட் படத்தின் எக்ஸ்டண்டட் வெர்ஷனை வெளியிட வேண்டுமென்றால் அதிகம் செலவாகும். இளம் விஜய்யின் டீ ஏஜிங் உள்ளிட்ட செலவுகள் இருப்பதால், தியேட்டர் வெர்ஷனையே ஓடிடியில் கண்டு ரசியுங்கள்.

பின்னர், டெலிடட் காட்சிகளாக சில காட்சிகளை வெளியிட தயாரிப்பாளரிடம் பேசுகிறேன் என வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார். மகாராஜா படம் ஓடிய அளவுக்கு கோட் திரைப்படம் ஓடிடியில் ஓடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



லியோ அளவுக்கு கோட் ஓடிடியில் ஓடினாலே மிகப்பெரிய சாதனை தான் என்கின்றனர்.  400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கோட் படம் அதிகபட்சம் 440 கோடி தான் வசூல் செய்தது. நடிகர் விஜய்க்கு இந்த படத்தில் நடிக்க 200 கோடி சம்பளமாக வழங்கப்பட்ட நிலையில், தயாரிப்பு நிறுவனத்துக்கு ஓடிடி மற்றும் சாட்டிலைட் விற்பனை தான் ஓரளவுக்கு கை கொடுத்திருக்கும் என்கின்றனர்.

ஓடிடி ரிலீஸுக்காக மேலும், பல கோடிகளை செலவு செய்து அர்ச்சனா கல்பாத்தி கோட் எக்ஸ்டண்டட் வெர்ஷனை வெளியிட வாய்ப்பே இல்லை என்பதால் தான் தியேட்டரில் வெளியான படத்தையே ஓடிடியில் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ரசிகர்கள் கோட் படத்தை பார்த்து விட்டு பல ஹாலிவுட் படங்களில் இருந்து காட்சிகளை வெங்கட் பிரபு சுட்டு எடுத்துள்ளார் என கிண்டல் செய்யாமல் இருந்தால் சரி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

Tags:    

Similar News