OTT: விஜய் சேதுபதி நடிப்பில் முக்கிய வெப்சீரிஸ் அறிவிப்பு… பேரே முரட்டுத்தனமா இருக்கே?

OTT: விஜய் சேதுபதி தன்னுடைய சினிமாவின் முக்கிய இடத்தில் இருக்கும் போது கூட வெப்சீரிஸில் நடிக்க இருக்கிறார். அதன் டைட்டில் அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன ரோலில் நடித்து பிரபலம் அடைந்தவர் விஜய் சேதுபதி. அவர் நடிப்பில் வெளியான பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் வெற்றியை கொடுக்க அவருக்கு வாய்ப்பு குவிந்தது.
தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி கொண்டார். ஒரே வருடத்தில் 6க்கும் அதிகமான படங்களில் நடித்தார். இதனால் அவருக்கு இருந்த மார்க்கெட் ஒரு கட்டத்தில் சரிவை நோக்கி சென்றது. எஸ்கேவின் போட்டி நடிகராக இருந்தவரின் மொத்த கேரியரும் ஆட்டம் கண்டது.
அந்த நேரத்தில் வில்லன் அவதாரம் எடுத்தார். ரஜினிகாந்த், கமல், விஜய் என டாப் ஹிட் பிரபலங்களின் படங்களில் வில்லனாக நடித்தார். இதனால் அவருக்கு பல மொழிகளில் வில்லன் வேடமே கிடைத்தது. இது தன்னுடைய கேரியரை கெடுக்கும் என யோசித்தவர் இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என அறிவித்தார்.
இந்நிலையில் அவர் நடிப்பில் மகாராஜா படம் ஆச்சரிய வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான தலைவன் தலைவி கூட நல்ல ஒரு வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில் மீண்டும் தன்னுடைய மார்க்கெட்டை சரி செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெப்சீரிஸ் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தினை காக்கா முட்டை மற்றும் கடைசி விவசாயி படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்க இருக்கிறார்.
விஜய் சேதுபதியுடன் இந்த வெப்சீரிஸில் ஜாக்கி ஷெராப்பும் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் இந்த வெப்சீரிஸுக்கு முத்து என்கிற காட்டான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்னணியில் இருக்கும் விஜய் சேதுபதியின் முழுநீள வெப்சீரிஸாக இது இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதற்கு முன் குட்டி ஸ்டோரி என்ற தமிழ் ஆந்தலாஜியில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.