சேத்துவச்ச கோவம்தான்! விஜயை பற்றி பிரேமலதா பேசியதற்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா?
கோடம்பாக்கத்தில் இப்போது பரவலாக அடிபடும் பேச்சு என்னவென்றால் விஜயின் அரசியல் பற்றிய நகர்வுதான். நாளுக்கு நாள் அவர் செய்யும் செயலால் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறார் விஜய். வரும் பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடுகிறாரா அல்லது அதற்கு அடுத்தபடியாக வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறாரா என்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் விஜயின் அரசியல் போக்கு குறித்தும் அவர் சினிமாவில் எப்படி பிரபலமானார் என்பதை பற்றியும் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். நிருபர் அந்தணனிடம் விஜயகாந்தால்தானே விஜய் இந்த அளவுக்கு ஒரு வளர்ச்சியை அடைந்திருக்கிறார். அவர் தானே வளர்த்து விட்டார் என்ற ஒரு கேள்வியை முன்வைக்க அதற்கு பதில் அளித்தார் அந்தணன்.
இதையும் படிங்க : உயிரே போனாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்!.. படப்பிடிப்பில் தகராறு.. ஜெ.வை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்…
அதற்கு பதில் கூறிய அந்தணன் யார் யாரையும் வளர்த்து விட முடியாது என்றும் எந்த சூழ்நிலையில் விஜயகாந்த் விஜய்க்கு உதவி செய்தார் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அதற்கு விஜய் என்ன கைமாறு செய்து இருக்கிறார் என்ற ஒரு கேள்வியையும் முன் வைத்தார். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் கேப்டனை பல பிரபலங்கள் போய் சந்தித்து கொண்டிருக்க இது நாள் வரைக்கும் விஜய் அவரை போய் சந்திக்கவே இல்லை. ஏன் அவர் உடல் நலம் குறித்தும் விசாரிக்கவும் இல்லை. இதுதான் அவர் காட்டும் நன்றி கடனா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
விஜய் மட்டும் கேப்டனை போய் சந்தித்திருந்தால் ஓரளவுக்கு விஜயகாந்திற்கு ஆறுதலாக இருந்திருக்கும் ஆனால் அதை விஜய் செய்ய தவறிவிட்டார் என்றும் கூறினார். சமீபத்தில் கூட விஜயின் அரசியல் குறித்து பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக பேசி இருந்தார். அதாவது கேப்டனை போல் வர வேண்டும் என்றால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரேமலதா தெரிவித்திருந்தார். இது கூட விஜய் மீது இருந்த கோபத்தை தான் பிரதிபலித்திருந்தார் பிரேமலதா என அந்தணன் கூறினார்.