இந்த அழகை காட்டியே மயக்கிப்புட்ட!.. பிரியா பவானி அழகில் சொக்கிப்போன புள்ளிங்கோ...
பத்திரிக்கையாளராக இருந்து நடிகையாக மாறியவர் பிரியா பவானி சங்கர். டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த போதே இவரின் அழகில் மயங்கி ரசிகர்களாக மாறினர். அப்போதே அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. ஆனால், கவர்ச்சி காட்ட சொல்வார்கள் என நினைத்தே அவர் ஒத்துக்கொள்ளவில்லை.
ஆனால், விஜய் டிவியில் ‘கல்யாணம் முதல் காதல்’ வரை சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்த போது அதை ஏற்றுக்கொண்டார். அந்த சீரியலில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் அப்படியே சினிமாவில் நுழைந்தார். கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த மேயாத மான் படத்தில் அறிமுகமானார்.
அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்துவிட்டார். அதேநேரம், கவர்ச்சி காட்ட மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஓ மணப்பெண்ணே, குருதி ஆட்டம், கடைக்குட்டி சிங்கம், அகிலன், யானை, பத்து தல, திருச்சிற்றம்பலம், ருத்ரன் என பல படங்களில் நடித்தார். இப்போது உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்திருக்கிறார்.
ஒருபக்கம், அழகான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புடவையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.