குத்துங்க எஜமான் குத்துங்க!.. அவர் எப்பவுமே அப்படித்தான்!.. ஆந்திரா போயும் ஏழரை இழக்கும் ஷங்கர்..

by prabhanjani |
shakar
X

இயக்குநர் ஷங்கர் எப்போதுமே பிரம்மாண்டமாக, அதிக பொருட்செலவில் தான் எடுப்பார் என்பது அனைவருக்குமே தெரியும். சிறு சிறு விஷயங்களில் கூட அதிகம் மெனக்கெட்டு, செலவு செய்து, வித்யாசமான பல முயற்சிகளை மேற்கொண்டு தான் படம் எடுப்பார். ஒரே ஒரு பாட்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை அசால்ட்டாக செலவு செய்து எடுப்பார்.

தமிழ் சினிமாவில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டவர் ஷங்கர். இதனால் தான் இவர் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் இவருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் அடிக்கடி பஞ்சாயத்து ஏற்படும். காரணம் படத்திற்கு சொன்ன பட்ஜெட்டை விட பல மடங்கு அதிகமாக்கிவிடுவார்.

இதையும் படிங்க- அடேய் எப்பா.. போதும்டா சாமி! ஷங்கர் சொன்ன ஐடியாவால் காண்டான உதயநிதி – ‘இந்தியன்2’ வில் ரணகளம்

Vfx, செட் அமைப்பது, வெளிநாட்டில் படப்பிடிப்பு உள்ளிட்ட பல காரணங்களால், படத்தின் பட்ஜெட் எகிறிவிடும். இதனால் ஏற்கனவே ஐ, சிவாஜி உள்ளிட்ட பல படங்களின் போது இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. அதன் பிறகு பேசி தீர்த்து படம் வெளியானது.

அடுத்தடுத்து இயக்குநர் ஷங்கருக்கு இந்தியன் 2, கேம் சேஞ்சர் உள்ளிட்ட 2 படங்கள் வரவுள்ளது. கேம் சேஞ்சர் தான் ஷங்கர் இயக்கும் முதல் தெலுங்கு படம். இந்த படத்தை வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜூ தயாரிக்கிறார். இவருக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையே ஏதோ பிரச்சனை என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.

இது குறித்து செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அந்த பேட்டியில், தில் ராஜூ பெரிய தயாரிப்பாளர் தான். அவர் பட்ஜெட் கொஞ்சம் உயர்ந்தாலும் சமாளித்துவிடுவார். ஒருவேளை சொன்னதை விட மிகவும் கூடுதலாக செலவானதால் கடுப்பாகியிருக்கலாம்.

ஷங்கரை வைத்து தயாரிப்பதற்கு முன்பே அவர் கேள்வி பட்டிருப்பார். இது வழக்கமான ஒரு பிரச்சனை தான். ஷங்கர் படம் என்றால் சொன்ன பட்ஜெட்டை விட அதிகமான தான் செலவாகும் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Next Story