கமல் படத்துல கலாட்டா... டைரக்டர் ஓட்டம்... அப்புறம் வந்தது தான் முரட்டுக்காளை..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படம் உருவானது எப்படின்னு பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.எம்.குமரன் இவ்வாறு பகிர்ந்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ்சினிமா உலகில் முதன் முதலாக நடித்த படம் 'களத்தூர் கண்ணம்மா'. இந்தப் படத்தில் அனாதை இல்லத்தில் கிழிந்த உடையுடன் நாலு வயசு சிறுவனாக முதல் காட்சியிலேயே சோகமாக நடிப்பதை ஆடியன்ஸ் ஏத்துக்க மாட்டாங்க. எழுந்து போயிடுவாங்கன்னு சொன்னார் டைரக்டர் பிரகாஷ்ராவ். அப்புறம் 4 நிமிஷம் உள்ள அந்தப் பாட்டை 1 நிமிஷமாக குறைச்சிட்டார். இதை மறுநாள் அப்பா […]

By :  sankaran v
Update: 2024-06-21 23:00 GMT

MK

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படம் உருவானது எப்படின்னு பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.எம்.குமரன் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ்சினிமா உலகில் முதன் முதலாக நடித்த படம் 'களத்தூர் கண்ணம்மா'. இந்தப் படத்தில் அனாதை இல்லத்தில் கிழிந்த உடையுடன் நாலு வயசு சிறுவனாக முதல் காட்சியிலேயே சோகமாக நடிப்பதை ஆடியன்ஸ் ஏத்துக்க மாட்டாங்க. எழுந்து போயிடுவாங்கன்னு சொன்னார் டைரக்டர் பிரகாஷ்ராவ்.

அப்புறம் 4 நிமிஷம் உள்ள அந்தப் பாட்டை 1 நிமிஷமாக குறைச்சிட்டார். இதை மறுநாள் அப்பா பார்த்தார். 'என்னப்பா நாலு நிமிஷ பாட்டை ஒன்றரை நிமிஷமாக்கினாங்க?'ன்னு கேட்டார். டைரக்டர் மாத்திட்டாருன்னு சொன்னதும் அவரை வரச்சொல்லுன்னு கூப்பிட்டு இந்தப் பாட்டு எனக்கு முழுசா தான் வேணும். அதோட லைன் பின்னால நல்லா பிக்கப் ஆகும்னு சொன்னார்.

Kalathur Kannamma

அதே நேரத்துல அவரு 'சார் என்னை விட்டுடுங்க. நீங்க தினமும் ஒண்ணு ஒண்ணா சொல்றீங்க. நான் விலகிடுறேன். நீங்க வேற யாரையாவது வச்சி எடுத்துக்கங்க'ன்னு சொல்லிடறாரு. அப்புறம் அசிஸ்டண்ட் டைரக்டரும் நம்ம சைடுல வேணும்னு சொன்னேன். அப்போ பிரகாஷ்ராவ் இருக்கும்போதே முத்துராமனைப் போட்டாரு அப்பா.

அப்புறம் பிரகாஷ்ராவ் போனதும் பீம்சிங் வந்தாரு. அவருடனும் முத்துராமன் அசிஸ்டண்ட்டா வேலை பார்த்தாரு. படமும் பெரிய ஹிட்டாச்சு. தொடர்ந்து முத்துராமனுடன் நட்பு இருந்தது. அப்பப்போ வருவாரு. எடுத்த படங்களை எல்லாம் காட்டுவாரு. அதுக்கு அப்புறம் அப்பா இறந்த பிறகு நாங்க படம் எடுக்கற ஐடியா இல்லாம இருந்தோம்.

அப்போ முத்துராமன் சொன்னாரு. 'நல்லாருக்குது. நீங்க விருப்பப்பட்டா குறைஞ்ச பட்ஜெட்ல படத்தை எடுத்துடலாம்'னு சொன்னாரு. அப்புறம் பஞ்சு அருணாசலம், ரஜினிகாந்த் என எல்லாரும் யூனிட்டா சேர்ந்து எடுத்த படம் தான் முரட்டுக்காளை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... விஜய் பிறந்தநாளுக்கு 2 படம் ரீ ரிலீஸ்!..அட்வான்ஸ் புக்கிங் எத்தனை லட்சம் தெரியுமா?!..

முரட்டுக்காளை படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. பொதுவாக எம் மனசு தங்கம் என்ற அறிமுகப் பாடல் ரஜினிக்கு பெரும்புகழைக் கொண்டு வந்து சேர்த்தது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே ஹிட். படத்தில் வில்லனாக ஜெய்சங்கர் அருமையாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News