விருது விழாவில் மார்க்கமான உடையில் கலக்கிய ராஷி கண்ணா.. அதுக்குன்னு இப்படியா!
நடிகை ராஷி கண்ணா, பிரபல விருது வழங்கும் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ராஷி கண்ணா தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். இவர் ஜான் ஆப்ரகாம் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான ‘மெட்ராஸ் கஃபே’ மூலம் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினாலும், இப்போது அவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார். கடந்தாண்டு அக்டோபர் 7 […]
நடிகை ராஷி கண்ணா, பிரபல விருது வழங்கும் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
ராஷி கண்ணா தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
இவர் ஜான் ஆப்ரகாம் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான ‘மெட்ராஸ் கஃபே’ மூலம் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினாலும், இப்போது அவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார்.
கடந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் பிரித்விராஜ் சுகுமாரனின் 'பிரம்மம்' மலையாள படத்திலும், தமிழில் 'திருச்சிற்றம்பலம் ' படத்திலும், தெலுங்கில் 'பக்கா கமர்ஷியல்' படத்திலும் நடித்திருந்தார்.
ராஷி கண்ணா தமிழில் கார்த்தி நடிப்பில் 'சர்தார் ' படத்திலும் அரண்மனை சீரிஸிலும் காணப்பட்டார். பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
சிலநாட்களுக்கு முன் "தென்னிந்திய படங்கள் பெண்ணுடலை புறநிலைப்படுத்துகின்றன" என ராஷி கண்ணா கருத்து தெரிவித்ததாக தகவல்கள் பரவின. இதையடுத்து நடிகை ராஷிகண்ணா ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் ராஷி கண்ணா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில்,"நேற்றைய IIFA விருது வழங்கும் நிகழ்வில்" என குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிங்க் நிற உடையில் மாடர்ன் லுக்கில் நடிகை ராஸி கண்ணா தோன்றியுள்ளார்.