உன் குடும்பத்தை நான் பாத்துக்குறேன்… நீ போ… ரஜினிகாந்தை தாங்கிய நண்பர்… செமல!

Rajinikanth: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக ரஜினிகாந்த் இருந்தாலும் அவர் இந்த நிலைமைக்கு வர அவரின் நண்பர் தான் முக்கிய காரணம். அவர் கொடுத்த எனர்ஜியில் தான் சினிமாவில் இந்த இடத்துக்கு வந்து இருக்கும் தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. கண்டெக்டராக வேலை பார்த்த ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் இன்று சினிமாவின் உட்ச நட்சத்திரம். இதற்கு காரணமாக இருந்தவர் அவரின் நண்பர் பகதூர் தானாம். இருவரும் ஒரே நேரத்தில் ஒரு பேருந்தின் கண்டெக்டர், டிரைவராக பணியில் சேர்ந்து இருக்கின்றனர். அப்போதே […]

By :  Akhilan
Update: 2023-09-19 00:00 GMT

Rajinikanth: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக ரஜினிகாந்த் இருந்தாலும் அவர் இந்த நிலைமைக்கு வர அவரின் நண்பர் தான் முக்கிய காரணம். அவர் கொடுத்த எனர்ஜியில் தான் சினிமாவில் இந்த இடத்துக்கு வந்து இருக்கும் தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

கண்டெக்டராக வேலை பார்த்த ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் இன்று சினிமாவின் உட்ச நட்சத்திரம். இதற்கு காரணமாக இருந்தவர் அவரின் நண்பர் பகதூர் தானாம். இருவரும் ஒரே நேரத்தில் ஒரு பேருந்தின் கண்டெக்டர், டிரைவராக பணியில் சேர்ந்து இருக்கின்றனர். அப்போதே பேருந்து வேலை செய்யும் ஊழியர்கள் நாடகம் போடுவது வழக்கம்.

இதையும் படிங்க: நானும் விஜயும் சண்ட போடுறது புதுசு இல்ல… அவருக்கு என்கிட்ட இது பிடிக்காது… ஓபனாக சொன்ன எஸ்.ஏ.சி

அப்படி ஒருமுறை நாடகத்தில் ரஜினிகாந்த் துரியோதனன் கேரக்டரில் நடித்து இருப்பார். அவர் நடிப்பினை பார்த்த பகதூர் ஆச்சரியப்பட்டு போனாராம். நீ சினிமாவில் நடிக்கவே பிறந்தவன். போய் முறையாக சினிமா கத்துக்கோ எனக் கூறினாராம்.

அப்போது ரஜினியின் குடும்பம் ரொம்பவே ஏழ்மையான நிலையில் இருந்து இருக்கிறது. அவர் தன்னுடைய நண்பரிடம் நான் இரண்டு வருடம் சினிமா படிக்க போனால் என்னுடைய குடும்பத்தை யார் பாத்துப்பா என்றாராம். அதுவும் சரி தான் என நினைத்த பகதூர் நான் பாத்துக்கிறேன். நீ தைரியமா போ எனக் கூறினாராம்.

சினிமா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது பாலசந்தரை பார்த்தவர் நீ தமிழ் கத்துக்கோ என ரஜினியிடம் கூறி இருக்கிறார். தமிழரான பகதூரிடம் இதை சொல்லி இருக்கிறார் ரஜினிகாந்த். உடனே நண்பர் இனி நாம் தமிழிலே பேசலாம் என்றாராம்.

இதையும் படிங்க: பாட்ஷா படத்தில் இது சரியில்லை… போல்டா சொன்ன பிரபல இயக்குனர்… ஆச்சரியப்பட்ட ரஜினிகாந்த்!

கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் டப்பிங் கொடுக்கும் அளவுக்கு தமிழை படித்துக்கொண்ட ரஜினிகாந்த் நேராக பாலசந்தரை காண சென்று இருக்கிறார். அவர் உனக்கு தான் தமிழ் தெரியாதே எனக் கேட்டாராம். அவர் தமிழில் சரளமாக பேச பாலசந்தருக்கே ஆச்சரியமாகி விட்டதாம்.

அதை தொடர்ந்தே அவருக்கு அபூர்வ ராகங்கள் படத்தின் வாய்ப்பை கொடுத்ததாக பகதூர் தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். கிட்டத்தட்ட ரஜினியை வாடா போடா என பேசும் அளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News