இத கேட்க நீங்க யாரு… காரசாரமாக கத்திய இளையராஜா… விஷமமாக வேலை பார்த்த ரஜினிகாந்த்!
Ilayaraja: தமிழ் சினிமாவின் இரண்டு மாபெரும் மேதைகளாக கருதப்படும் இளையராஜாவும், ரஜினிகாந்தும் வீரா படத்துக்கு பின்னர் இணையவே இல்லை. அதன் பின்னர் ரஜினிகாந்த் தன்னுடைய படத்தில் இளையராஜா வேண்டாம் எனச் சொன்னதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய சண்டையே இருக்கிறதாம்.
ரஜினிகாந்தின் ஆரம்பகாலங்களில் நிறைய படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. ஆனால் கிட்டத்தட்ட 30 வருடங்களாக ரஜினிகாந்தின் எந்த படத்துக்குமே இளையராஜா இசையமைக்கவே இல்லை. இதன் காரணமாக இரண்டு தரப்பும் வெவ்வேறு காரணத்தினை கூறுகிறது.
இதையும் படிங்க:இளையராஜா நல்லா இல்லனு சொன்னால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்… இது என்னப்பா புது உருட்டா இருக்கு!
ரஜினிகாந்தின் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவான படம் உழைப்பாளி. இப்படத்திற்கு இளையராஜா பாதி இசையமைத்து விட்டு வெளிநாட்டிற்கு சென்று விட்டார். மீதி இருந்த படத்தினை அவரின் மகன் கார்த்திக் ராஜா தான் இசையமைத்தாராம். இதில் படத்தின் தயாரிப்பாளருக்கும், ரஜினிக்கும் மிகப்பெரிய வருத்தம் ஏற்பட்டு இருக்கிறது.
அதை தொடர்ந்தே, வீரா படத்துக்கு பின்னர் எந்த படத்திலையும் இளையராஜாவை புக் செய்ய வேண்டாம் என ரஜினிகாந்தே சொல்லி விடுவாராம். அப்போது ஹிட்டில் இருந்த மற்ற இசையமைப்பாளரை ரஜினி படத்துக்கு புக் செய்து வந்தனராம்.
இதையும் படிங்க:இதெல்லாம் கதையா? விரக்தியில் விலக நினைத்த ரஜினி… ஒரே வார்த்தையில் அடக்கிய இளையராஜா!
ஆனால், இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் கூறும் போது பாட்ஷா சமயத்தில் ரஜினிகாந்த் இளையராஜாவுக்கு ஏன் இவ்வளவு சம்பளம் எனக் கேட்டு இருக்கிறார். அதில் கடுப்பான ராஜா உங்க சம்பளத்த நீங்க வாங்கிட்டீங்கள? ஏன் என் சம்பளத்த கேட்டுகிறீங்க எனக் கேட்டாராம். இதில் படக்குழு அதிருப்தியாகி இருக்கிறது. அந்த சம்பவத்துக்கு பின்னர் இருவருமே இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதை தொடர்ந்து தேவாவை இளையராஜாவிற்கு பதில் கமிட் செய்ததாக கூறப்படுகிறது. இதில் யார் பக்கம் நியாயம் என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு அழகான கூட்டணியை தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து மிஸ் செய்து வருகின்றனர் என்பது மட்டுமே உண்மை.