3 வருஷமா யோசிச்சு கார்ட்டூன் கதையை சுட்ட இயக்குனர்...அதிர்ந்து போன தனுஷ்....
முண்டாசுப்பட்டி மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்த இயக்குனர் ராம்குமார் அடுத்து கையில் எடுத்தது ‘ராட்சசன்’ எனும் ஒரு சைக்கோ திரில்லர் திரைப்படம். 2
018ம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் வெளிவந்த படங்களில் சிறந்த திரில்லர் படமாக இருந்ததால் விமர்சகர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடினர். இப்படம் மாபெரும் வெற்றியையும் பெற்றது.
இப்படத்தை பார்த்த தனுஷ் அப்பட இயக்குனர் ராம்குமாரை அழைத்து நாம் இணைவரும் இணைந்து ஒரு படம் செய்வோம். கதையை தயார் செய்யுங்கள் எனக்கூற, ராம்குமாரும் அதற்கான வேலைகளில் இறங்கினார். ஆனால், இதோ இதோ என 3 வருடங்கள் இழுத்து விட்டார் ராம்குமார்.
ராம்குமாருக்காக காத்திருந்த தனுஷ் ஒரு கட்டத்தில் மற்ற படங்களில் நடிக்க துவங்கினார். அப்படி பட்டாஸ், அசுரன், கர்ணன், ஜகமே தந்திரம் மாறன், திருச்சிற்றம்பலம் மற்றும் ஒரு பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படம் என இந்த 3 வருடங்களில் 8 படங்களில் நடித்துவிட்டார். இதில் திருச்சிற்றம்பலம் படம் முடிந்துவிட்டது. மாறன் விரைவில் முடியவுள்ளது. மற்ற 3 தமிழ் படங்களும் வெளியாகி விட்டது.
தற்போது ஒரு வழியாக கதையை முடித்து தனுஷிடம் கூறியுள்ளார் ராம்குமார். ஆனால், அவர் கூறிய கதை எங்கே கேள்விப்பட்ட மாதிரி இருக்கே என தனுஷுக்கு பொறிதட்ட தனது டீமை அழைத்து, இந்த கதை இதற்கு முன்பு படமாக வந்திருக்கிறதா என கண்டுபிடியுங்கள் எனக்கூறியுள்ளார். 10 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின் ஒரு கார்ட்டூன் கதையைத்தான் சுட்டு கொஞ்சம் பட்டி டிங்கர் பார்த்து அவர் கூறியிருப்பதை தனுஷ் டீம் கண்டுபிடித்துள்ளதாம்.
3 வருடம் கழித்து இப்படி சுட்ட கதையை கூறுகிறாரே என வெறுத்துப்போன தனுஷ், ராம்குமார் வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம். எனவே, சிவகார்த்திகேயனை வைத்து இயக்கலாம் என தற்போது அவர் பின்னால் சென்றுள்ளார் ராம்குமார்.
ராம்குமார் இயக்கிய ராட்சசன் திரைப்படமே ஒரு ஆங்கில படத்தில் தழுவல்தான் என அப்போதே செய்திகள் வெளியானது. இது தனுஷுக்கும் தெரிந்திருக்கும் அல்லவா.. அதனால்தான் அவர் கூறிய கதை சுட்டதா என தேட சொல்லி கண்டுபிடித்துவிட்டார் எனத் தெரிகிறது.
இந்த தகவல்கள் பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது.