ஹீரோ ஐட்டக்காரன்... வில்லன் அழுகுணி... இதுதான் ஏஸ் படத்தின் லட்சணம்... புளூசட்டைமாறன் விளாசல்

விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தைப் பற்றி பிரபல சினிமா விமர்சகரும், யூடியூபருமான புளூசட்டை மாறன் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
படத்தோட ஆரம்பத்துல ஹீரோவக் காட்டுறாங்க. அவரு ஒரு ஐட்டக்காரன் மாதிரி பில்டப் கொடுக்குறாங்க. தன்னோட ஐட்டக்காரத் தொழிலை விட்டுட்டு புது வாழ்க்கை வாழப்போறேன்னு மலேசியாவுக்குப் போறாரு. அங்கே யோகிபாபு அடைக்கலம் கொடுக்குறாரு. ஹீரோன்னு இருந்தா ஹீரோயின் இருப்பாருல்ல. அங்க ஹீரோயினை சந்திக்கிறாரு.
அவருக்கு நிறைய பணம் தேவைப்படுது. அதுக்கு உதவுறாரு. அதனால யோகிபாபு சூதாட்டம் நடக்குற இடத்துக்கு கூட்டிட்டுப் போறாரு. அங்க தான் வில்லனை சந்திக்கிறாரு. அங்கே ஏகப்பட்ட பிரச்சனை நடக்குது. யாருக்கு? ஹீரோக்கு அல்ல. படம் பார்க்குற நமக்குத்தான். அதுக்கு அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை.
படத்தோட ஆரம்பத்துல ஐட்டக்காரன்னு ஹீரோவக் காட்டுறாங்க. அப்படின்னா வில்லன் எவ்வளவு பெரிய ஐட்டக்காரனா இருக்கணும்? படத்துக்குப் பேரு ஏஸ்னு வச்சாச்சு. அதனால கேசினோ மாதிரி காட்டுவாங்கன்னு பார்த்தா கேசினோவைக் குடிசைத் தொழிலா காட்டுறாங்க. அங்கு ஹீரோவை ஜெயிச்சிட்டேன்குறான். கேஜிஎப் வில்லன் தானே. ஏன்டா அழுகுணி ஆட்டம் ஆடுறே. எப்ப பார்த்தாலும் வில்லன் பின்னாடி நாலு அல்லக்கை சுத்திக்கிட்டு வர்றாங்க. அவங்களுக்கு ஹீரோகிட்ட போய் அடி வாங்கிட்டு வர்றதுதான் வேலை.
படத்துல ஒரு ராபரி சீன் வருது. அந்த மாதிரி கேடு கெட்ட சீன் உலக சினிமாவுலயே கிடையாது. நட்ட நடு ரோட்டுல வச்சி மலேசியாவுல கொள்ளை அடிக்கிறாங்க. கேட்க ஆள் கிடையாது. ரோட்ல நாலு போலீஸ் நிக்கான். கன்ட்ரோல் ரூம்ல 10 போலீஸ் பார்;த்துக்கிட்டே இருக்கான். கார் சேஸிங்லாம் நடக்குது. மலேசியா பாதுகாப்பையே கேவலப்படுத்திருக்காங்க.
இப்படித்தான் விடாமுயற்சியில அஜர்பைஜானக் கேவலப்படுத்தினாங்க. இனிமே யோகிபாபு படம் வந்தா தியேட்டர்வாசல்ல டாக்டர், நர்ஸ், ஆம்புலன்ஸ் எல்லாத்தையும் அலர்ட்டா வச்சிக்கணும். படம் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சி கீழே விழுந்து மூஞ்சி முகரையை உடைச்சிக்கிட்டாங்கன்னா... அதுக்கு ஃபர்ஸ்ட் எய்டு பண்ணனும். சிரிச்சி வயிறு வெடிச்சி செத்துப் போயிட்டாங்கன்னா அதுக்கும் வைத்தியம் பார்க்கலாம்.
அந்தமாதிரி காமெடி பண்றாரு. இன்னும் உட்கார்ந்து நம்பிக்கிட்டு இருக்காங்க இந்த சினிமாக்காரங்க. விஜய்சேதுபதி ஆரம்பத்துல நல்லா நடிச்சிக்கிட்டு இருந்தாரு. அவருக்கு மார்க்கெட் வந்தது. அப்புறம் அந்த மார்க்கெட்டை நாலாபக்கமும் காசாக்குறேன்னு வர்ற காசை எல்லாம் கல்லாவுல போட்டுக்கிட்டாரு. கண்ட கண்ட படங்கள்ல நடிச்சி நம்மளை சாகடிச்சாரு. இனிமே இவரு திசைக்கே போகக்கூடாதுன்னு ஆடியன்ஸ் முடிவு பண்ணினாங்க.
திடீர்னு பார்த்தா மகாராஜான்னு ஒரு நல்ல படம் வந்தது. சரி ஃபார்முக்கு வந்துட்டாருன்னு பார்த்தா அவருக்கே தெரியாம ஒரு நல்ல டைரக்டர் அந்தப் படத்தை அந்தப் பாடுபட்டு எடுத்துருக்காரு. ஏமாந்து அந்தப் படத்தை வெளியே விட்டுருக்காங்க. இனி பழையபடி ஃபுல் பார்முக்கு வந்துட்டாரு. இனி கொலை கேரண்டிதான். இந்தப் படத்துல உழைச்ச ஒரே நடிகை ஹீரோயின்தான்.
பகல் எல்லாம் துணிக்கடையில வேலை செய்யுது. சாயந்திரம் பார்ல வேலை செய்யுது. ரியல் எஸ்டேட் வேலை செய்யுது. சூர்ய வம்சம் படத்தை மாதிரி ஒரே பாட்டுல பெரிய ஆளா ஆகி பிரச்சனையை எல்லாம் தீர்க்கப் போறாங்கன்னு பார்த்தா அதையும் வீணாக்கிட்டாங்க.
அந்த அம்மா உழைப்பு எல்லாம் வேஸ்டாப்போச்சு. இந்தப் படத்துல விஜய்சேதுபதி யாருங்கற டீட்டெய்ல எல்லாம் சொல்லாம விட்டுட்டீங்களே.. படத்துல வேணா மறைச்சிருக்கலாம். ஆனா நிஜத்துல அவரு யாரு? என்னன்னு எல்லாம் தெரிஞ்சிக்கிட்டுத்தானே படத்துக்குப் போனோம். அது நம்ம தப்பு தானே? என்கிறார் புளூசட்டை மாறன்.